Ad Space Available here

ரிசாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்­கி­விட்டு நியா­ய­மான விசா­ர­ணையை நடாத்த வேண்டும்


-ARA FAREEL -

கோடிக்­க­ணக்­கான ரூபாய் பெறு­ம­தி­வாய்ந்த போதைப் பொருள் அர­சாங்க நிறு­வ­ன­மொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது. இந்த போதைப்­பொருள் கடத்­தலின் பின்­ன­ணியில் அர­சியல் பின்­புலன் உள்­ளது. எனவே ச.தொ.ச.நிறு­வ­னத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்­கி­விட்டு நியா­ய­மான விசா­ர­ணையை நடாத்த வேண்டும் என பொது­பல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது. 


இரத்­ம­லானை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தி­லுள்ள ச.தொ.ச. களஞ்­சி­ய­சா­லைக்கு சீனி கொண்­டு­வ­ரப்­பட்ட கொள்­க­ல­னி­லி­ருந்து மீட்­கப்­பட்ட கொக்கைன் தொடர்பில் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே மேலும் தெரி­வித்துள்­ள­தா­வது,


அரச நிறு­வ­ன­மொன்­றுக்­கென சீனி இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கொள்­க­லனில் 320 கோடி ரூபா பெறு­ம­தி­யான 218.6 கொக்கைன் அதி­கா­ரி­களால் மீட்­கப்­பட்­டுள்­ள­தென்­பது பார­தூ­ர­மான விட­ய­மாகும். அர­சியல் பின்­புலம் கொண்ட இந்த போதைப்­பொருள் கடத்­தலை மறைத்து விடாமல் இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? என்­பதைக் கண்­ட­றிந்து நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும். 


இலங்­கைக்கு போதைப்­பொருள் கடத்­தப்­பட்டு வரு­கி­றது. இதன் பின்­ன­ணியில் அர­சியல்வாதிகள் செயற்­ப­டு­கி­றார்கள் என்று நாம் பல வரு­டங்­க­ளாக தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கிறோம். ஆனால் அர­சாங்கம் இவ்­வி­ட­யத்தில் பொறுப்­பற்று நடந்து கொண்­டது. நாம் அன்று கூறி­ய­வைகள் இன்று நிரூ­பிக்­கப்­பட்­டு­விட்­டன. 


இலங்கை இன்று போதைப்­பொருள் விநி­யோக மத்­திய நிலை­ய­மாகத் திகழ்­கி­றது. இங்­கி­ருந்தே ஏனைய நாடு­க­ளுக்கும் போதைப்­பொருள் இர­க­சி­ய­மாக விநி­யோ­கப்­ப­டு­கி­றது. சிலா­வத்­துறை, மன்னார் ஆகிய பகு­தி­க­ளுக்கு கடல்­மார்க்­க­மாக போதைப் பொருள் கடத்­தி­வ­ரப்­ப­டு­கி­றது. 


போதைப் பொருள் கடத்­தலை இல்­லாமற் செய்­வ­தற்­கா­கவே வில்­பத்து குடி­யேற்­றங்­களை நாம் எதிர்க்­கிறோம். வில்­பத்­துவில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் போதைப் பொருள் கடத்­த­லுக்கு சாத­க­மாக அமையும் என நாம் கூறி­வந்தோம். வில்­பத்து வன­பி­ர­தேசம் அழிக்­கப்­ப­டு­வது நிறுத்­தப்­ப­ட­வேண்­டு­மென நாம் அர­சுக்கு அழுத்தம் கொடுத்தோம்.


வில்­பத்து குடி­யேற்­றங்கள் மூலம் மேலும்  நாட்டின் பாது­காப்­புக்கு சவால் விடும் சம்­ப­வங்­களும் இடம்­பெ­றலாம். ஆயு­தக்­க­டத்தல் கூட இடம்­பெ­றலாம் என்று நாம் எச்­ச­ரிக்கை விடுக்­கிறோம். கொக்கைன் கடத்தல் தொடர்­பாக உட­ன­டி­யாக நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் ச.தொ.ச. நிறு­வ­னத்­துக்குப் பொறுப்­பாக இருக்கும் வரை விசா­ர­ணைகள் நியா­ய­மாக நடைபெறாது. எனவே ஜனாதிபதி அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். ஆனால் பிரேசிலில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுவதையே நிறுத்த வேண்டும் என நாம் கூறுகிறோம் என்றார்.


அமைச்சர் ரிசாத் தரப்பு மறுப்பு

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீது அர­சியல் ரீதி­யி­லான காழ்­ப்பு­ணர்வு கொண்­ட­வர்­களும் ஒரு சில அர­சியல் கட்­சி­க­ளுமே அமைச்­சரை இவ்­வி­வ­கா­ரத்­துடன் தொடர்­பு­ப­டுத்­து­கின்­றன என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் ஊட­கப்­பி­ரிவு  தெரிவித்துள்ளது. 


இரத்­ம­லானை களஞ்­சி­ய­சா­லை­யி­லி­ருந்து  கொள்­க­ல­னொன்றில் மீட்­கப்­பட்ட கொக்கைன் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையிலேயே இவ்வாறு தெரி­வித்­துள்­ளது. தொடர்ந்தும் அவ் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ச.தொ.ச.வுக்­கான சீனி இறக்­கு­மதி தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு ஒவ்­வொரு வாரமும் டென்டர் மூலமே வழங்­கப்­ப­டு­கி­றது. கொக்கைன் மீட்­கப்­பட்ட சீனி  இறக்­கு­ம­திக்­கான டென்டர் அவ்­வாரம் ரஞ்­சிதா பிளஸ்  நிறு­வ­னத்­துக்கே வழங்­கப்­பட்­டி­ருந்­தது.  

வில்­பத்­துவில் முஸ்லிம் குடி­யேற்­றங்­களை எதிர்த்­து­வரும் இன­வாத தேரர்கள் தொடர்ந்து அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வந்­தார்கள். அமைச்­ச­ரையும் அமைச்­சரின் சகோ­த­ர­ரையும் போதைப்­பொருள் விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­ப­டுத்தி வந்­தார்கள். அமைச்­சரைப் பழி­வாங்க வேண்­டு­மென்­பதே  அவர்­க­ளது  குறிக்­கோ­ளாக  இருந்­தது. 


 தற்­போது ச.தொ.ச.நிறு­வ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சீனி கொள்­க­லனில் மீட்­கப்­பட்ட கொக்­கை­னுடன்  அமைச்­ச­ரரைச் சம்­பந்­தப்­ப­டுத்­து­வது எவ்­வ­கை­யிலும்  ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். அத்­தோடு அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின்  அர­சியல் பய­ணத்தைப்  பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகளும்  அமைச்சரை இவ்விவகாரத்துடன் தொடர்புபடுத்துவது கவலைக்குரியதாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரிசாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்­கி­விட்டு நியா­ய­மான விசா­ர­ணையை நடாத்த வேண்டும் ரிசாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்­கி­விட்டு நியா­ய­மான விசா­ர­ணையை நடாத்த வேண்டும் Reviewed by Madawala News on 7/24/2017 08:02:00 PM Rating: 5