Kidny

Kidny

அலோசியஸ் மஹேந்திரன் செலவில் ரவிக்கு சொகுசு வாடகை வீடு !


பிணை முறி மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனின் மருமகன் அலோசியஸ் தனது நிதி நிறுவனம் மூலம் பணம் செலுத்தி சொகுசு வீடு ஒன்றை வாடகைக்கு அமைச்சர் ரவி கருனாநாயக்கவுக்கு பெற்றுக்கொடுத்ததாக குறித்த வீட்டு உரிமையாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த வீட்டை ரவி கருனாநாயக்கவுக்கு அலோசியஸ் பெற்றுகொடுக்க நூற்று பதினாறு லட்சம் தனக்கு கொடுப்பனவு செய்துள்ளதாக குறிப்பிட்ட குறித்த வீட்டு உரிமையாளர் பின்னர் அந்த வீட்டை ரவி கருநானாயக்கவின் மகள் மற்றும் மனைவிக்கு சொந்தமான நிறுவனம் விலைக்கு பெற்றுக்கொண்டு விட்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.

அதே நேரம் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளைய தினம் முன்னிலையாக மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய நாளைய தினம் முன்னிலையாகுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும்,தமது பணிகளின் நிமித்தம் அவரால் நாளையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி ஆணைக்குழுவில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோசியஸ் மஹேந்திரன் செலவில் ரவிக்கு சொகுசு வாடகை வீடு ! அலோசியஸ் மஹேந்திரன் செலவில் ரவிக்கு சொகுசு வாடகை வீடு ! Reviewed by Madawala News on 7/24/2017 11:21:00 PM Rating: 5