tg travels

சட்டத்தின் பிடிக்குள் ஞானசாரர்...


MHM FAZEER-

கல­கொட அத்தே ஞான­சார தேரர். இவரை தெரி­யாத யாரும் இன்று இலங்­கையில் இருக்க முடி­யாது. பெளத்த தேர­ரான இவரை இன, மத, மொழி பேத­மின்றி அனை­வரும் அறிந்து வைத்­தி­ருக்க, அவ­ரது அகிம்சை வழி­முறை ஒன்றும் கார­ண­மல்ல. மாற்­ற­மாக தொனியை உயர்த்தி, அதி­கார தோர­ணையில், பிறர் ஒரு­போதும் விரும்­பாத பாணியில், விரும்­பத்­த­காத வச­னங்­களை லாவ­க­மாக கையா­ளு­வ­தா­லேயே அவரை அனை­வரும் அறிந்து வைத்­துள்­ளனர்.


இத்­த­கைய ஆவேச குணம் கொண்ட கல­கொட அத்தே ஞான­சார தேரர், அந்த பண்­பி­னா­லேயே தற்­போது சட்­டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்­டுள்ளார்.



ஆம், 2016 ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் ஞான­சார தேரர், தனது வழ­மை­யான விளை­யாட்டைக் காட்டச் சென்று, பொறிக்குள் மாட்­டிய எலியாய் தற்­போது சட்­டத்­துடன் போராடிக் கொண்­டி­ருக்­கின்றார்.



கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமலாக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது, ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்­து­மீ­றி­யி­ருந்தார். இதன்­போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இத­னை­விட அன்­றை­ய­தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன் ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி­தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார்.


அத்­துடன் சட்ட மா அதிபர் திணைக்­கள அதி­கா­ரி­க­ளையும் அச்­சு­றுத்­தி­யி­ருந்தார். இதனால் அன்­றைய தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான சந்­தியா எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்றச் சாட்­டு­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.



இந் நிலையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. 



இது தொடர்­பி­லான வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் கடந்த 18 ஆம் திகதி முதல் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.



அதன்­படி கடந்த 18 ஆம், 19 ஆம் திக­தி­களில் வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில் ஒரு சாட்­சி­யாளர் மட்டும் முழு­மை­யாக சாட்­சி­யங்­களை வழங்­கி­யுள்­ள­துடன் குறுக்குக் கேள்­வி­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்டார். அவர் வேறு யாரும் அல்ல ஞான­சார தேரர், ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இவ்­வாறு அநா­க­ரி­க­மாக நடந்­து­கொண்­ட­போது ஹோமா­கம நீதி­வா­னாகக் கட­மை­யாற்­றிய தற்­போ­தைய கொழும்பு மேல­திக நீதிவான் ரங்க திஸா­நா­யக்­கவே அவர். தற்­போது குறித்த சம்­பவம் இடம்­பெறும் போது ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இருந்த பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்சி வழக்கை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். இந் நிலையில் இது­கு­றித்த மேல­திக விசா­ர­ணைகள் எதிர்­வரும் 26 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.



இந்த விசா­ர­ணை­களை சட்ட மா அதிபர் சார்பில் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய நெறிப்­ப­டுத்தும் நிலையில் வழக்கில் முன்னாள் ஹோமா­கம நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­ந­யக்க, முன்னாள் அரசின் சிரேஷ்ட சட்­ட­வா­தியும் தற்­போ­தைய பிரதி சொலி­சிற்றர் ஜென­ர­லு­மா­கிய திலீப பீரிஸ் உள்­ளிட்ட எட்டு சாட்­சி­யங்கள் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.



இந் நிலையில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க சாட்­சி­யத்தில் தெரி­வித்த சில விட­யங்­களை விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்­துகிறது.



'தொலை­பேசி மணி அடித்­த­தாலும், கொட்­டாவி விட்­ட­தற்­கா­கவும் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்ட வர­லா­றுகள் எமது நீதித்­து­றையில் உள்­ளன. இந் நிலையில் நீதி­மன்ற விசா­ர­ணையின் இடை நடுவே, நீதி­வா­னுக்கு நேராக தனது விரல்­களை நீட்டி, எக்­னெ­லி­கொட வழக்கின் சந்­தேக நபர்­க­ளான இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பிணை வழங்­கு­மாறு நீதி­வா­னுக்கே கட்­டளை இட்டும், நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தியும் நீதி­மன்றை அவ­ம­தித்த ஞான­சார தேர­ருக்கு உச்ச தண்­டனை வழங்­கப்­படல் வேண்டும். அத­னா­லேயே நான் இந்த வழக்கை அர­சி­ய­ல­மைப்பின் 105 (3) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தினேன். ஏனெனில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றினால் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னையைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.



நீதி­மன்­றுக்கு இவ்­வா­றான இடை­யூறு ஏற்­ப­டுத்தி, சிரேஷ்ட அரச சட்­ட­வா­தியை பேடித்­த­ன­மா­னவர் எனவும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் உள்­ள­வர்­களும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­களே என்றும் கூறி அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் ஞான­சார தேரர் நடந்­து­கொண்டார். இத்­த­கைய சம்­பவம் ஒன்­றுக்கு நான் எனது 12 வரு­ட­கால நீதிவான் சேவையில் முகம் கொடுத்­ததே இல்லை. அதனால் அந்த சம்­ப­வமும், நாளும் என்னால் மறக்க முடி­யா­தது. எனக்கு தெரிந்த வகையில் இந்த சம்­பவம் தான் நீதி­மன்றை அவ­ம­திக்கும் வித­மாக பதி­வா­கி­யுள்ள மிகப் பெரிய சம்­பவம்' என நீதிவான் ரங்க திஸா­ந­யக்க சாட்­சியம் அளித்­தி­ருக்­கின்றார்.



இந்த சாட்­சி­யங்­களில் உள்ள ஒவ்­வொரு விட­யமும் மிக முக்­கி­ய­மா­னது. ஏனெனில் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் இரு வழி­களில் நீதிவான் ஒரு­வ­ருக்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம்.



நீதிவான் என்ற ரீதியில் நீதி­மன்ற அமைப்புச் சட்­டத்தின் 55 (2 ) ஆவது அத்தியாயத்தின் கீழும் அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் கீழ் நீதிவான் நடவடிக்கை எடுத்திருப்பின் அது சிறிய ஒரு தண்டனையையே ஞானசாரவுக்கு பெற்றுக்கொடுத்திருக்கும். எனினும் இங்கு நீதிவான் வழக்கை அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தியுள்ளமையானது ஞானசார தேரருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே. 



எனவே, நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஞானசார தேரர் மீதான குற்றம் நிரூபணமாகுமானால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம்.

சட்டத்தின் பிடிக்குள் ஞானசாரர்... சட்டத்தின் பிடிக்குள் ஞானசாரர்... Reviewed by Madawala News on 7/23/2017 03:22:00 PM Rating: 5