Kidny

Kidny

அமெரிக்காவின் மத்திய ஆசியத் திட்டம் !


Muja ashraff 

இந்த புவியியல் – அரசியல் சூழலிலிருந்து தான் அமெரிக்கா மத்திய ஆசியாவுக்கான தனது கொள்கையை வகுக்கிறது. “சோவியத் பிடியிலிருந்து மத்திய ஆசிய நாடுகளை விடுவித்து, அமெரிக்க முதலாளிகளுக்கு அங்கே வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் நமது மத்திய ஆசியக் கொள்கையின் நோக்கம்” என்று அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவின் ஆவணம் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறது.


அது மட்டுமல்ல, மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை கைப்பற்றுவதன் மூலம் எண்ணெய் உற்பத்தியில் வளைகுடா நாடுகள் பெற்றிருக்கும் ஆதிக்கத்தை உடைப்பது, உலக எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் தனது ஏகபோக அதிகாரத்தை நிறுவுவது, ‘ஒபெக்’ என்ற எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒன்றியத்தை பிளப்பது ஆகியவை அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டங்கள்.


தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள் என ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.


“ஆசியா ஒரு விமானம் என்றால் அதில் விமான ஓட்டியின் அறை ஆப்கானிஸ்தான்” என்றான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதி கர்சன். இப்போது விமான ஓட்டியின் அறையில் நின்று கொண்டிருப்பதோ – அமெரிக்கா

அமெரிக்காவின் மத்திய ஆசியத் திட்டம் ! அமெரிக்காவின் மத்திய ஆசியத் திட்டம் ! Reviewed by Madawala News on 7/09/2017 05:41:00 PM Rating: 5