tg travels

இவ்வருடம் மாகாண சபை தேர்தல் இல்லை ! அனைத்து மாகாண சபைகளுக்கான  தேர்தலை ஒரே தினத்தில் நடத்த அமைச்சரவை அனுமதி


மாகாண சபைகள் தேர்தலை ஒரே தினத்தில் நடத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் தேர்தலை தனித்தனியாக நடாத்துவதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை உணர்ந்து, அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் ஓரே தினத்தில் நடாத்துவதற்கு முடியுமான வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளை திருத்தம் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் மாகாண சபை தேர்தல் இல்லை ! அனைத்து மாகாண சபைகளுக்கான  தேர்தலை ஒரே தினத்தில் நடத்த அமைச்சரவை அனுமதி இவ்வருடம் மாகாண சபை தேர்தல் இல்லை ! அனைத்து மாகாண சபைகளுக்கான  தேர்தலை ஒரே தினத்தில் நடத்த அமைச்சரவை அனுமதி Reviewed by Madawala News on 7/26/2017 11:40:00 PM Rating: 5