tg travels

மஹிந்த அரசாங்கத்தில் இருந்த கருப்பு ஆடு இப்போது நல்லாட்சியில்..


மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அநீதமிழைக்கும் போது மஹிந்தவையும், கோட்டாபயவையும் வாயை மூடி வைத்தவர் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க என தேசிய சகோதார சிங்கள வார இதழொன்று தெரிவித்துள்ளது.


முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை சேதப்படுத்தி, வியாபார நிலையங்களுக்கும் தாக்குதல் நடாத்தும்படி பொதுபல சேனாவை ஈடுபடுத்தியது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவென அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதற்கு பொதுபல சேனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது சம்பிக்கவே அதனைத் தடுத்துள்ளார். 

மஹிந்த அவ்வாறு பொதுபல சேனாவை தடுக்க முற்பட்டால், நாட்டிலுள்ள சகல பிக்குகளையும் அரசாங்கத்துக்கு எதிராக பாதையில் இறக்குவதாகவும் அப்போதைய அரசாங்கத்தை பாட்டளி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பாத்திரமேற்று செயற்படும் அமைச்சர் சம்பிக்கவின் செல்வாக்கினால் தானா, பொதுபல சேனா தலைவிரித்தாடியது என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுகின்றது என்பது தவிர்க்க முடியாதது. கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கத்தையும் அமைச்சர் சம்பிக்க எச்சரித்து வைத்தஅதனாலா பொதுபல சேனாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதுவரையில் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது.

நாட்டில் முக்கிய மூன்று மகாநாயக்கர்களும் வரலாற்று நிகழ்வாக குறிப்பிடும் அளவுக்கு, ஒன்றிணைந்து பொதுபல சேனாவின் பாதுகாப்பு குறித்து விட்ட அறிக்கையின் பின்னால் உள்ளது சக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவா? என்ற கேள்வியும் எல்லோருடைய உள்ளத்திலும் எழுவது இயல்பானது.

பொதுபல சேனாவிற்கு எதிராக அரசாங்கத்தின் கரம் வேலை செய்யப் பார்க்கும் போது தனது சக்தியை மிஞ்சி அரசாங்கம் செல்லப் பார்க்கின்றது எனக் கருதிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடைசியாக உள்ள துரும்பையும் பயன்படுத்தியுள்ளார். அந்த துரும்புதானா மகாநாயக்கர்களின் தலையீடு எனவும் சந்தேகப்படுவதை யாராளும் தடுக்க முடியாது.  

-DC -

மஹிந்த அரசாங்கத்தில் இருந்த கருப்பு ஆடு இப்போது நல்லாட்சியில்.. மஹிந்த அரசாங்கத்தில் இருந்த கருப்பு ஆடு இப்போது நல்லாட்சியில்.. Reviewed by Madawala News on 7/09/2017 03:19:00 PM Rating: 5