tg travels

ஞானசார தேரரை பாதுகாத்ததில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பாரிய பங்கு ..


ஞானசார தேரரை ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவே பாதுகாத்ததாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி குறிப்பிட்டார்.


தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு தடவையாவது ஞானசார தேரரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கவில்லை எனவும் இந்த ஜனாதிபதி மூன்று தடவை அவரை அழைத்து பேசியதாக குறிப்பிட்ட அவர் 

ஜனாதிபதி இணைப்பு செயலாளர் ஷிரால் லக்தில மற்றும் ஊழல் எதிர்ப்பு முன்னணி தலைவர் உலப்பனே சுமங்கள ஹிமி ஆகியோர் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் ஞானசார தேரரை பாதுகாத்ததாக அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரை பாதுகாத்ததில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பாரிய பங்கு .. ஞானசார தேரரை பாதுகாத்ததில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பாரிய பங்கு .. Reviewed by Madawala News on 7/03/2017 04:49:00 AM Rating: 5