Yahya

மஹிந்தவை விமர்சிப்பதை விட இந்த நல்லாட்சி நாட்டுக்குச் செய்த நல்லது என்ன?


மஹிந்த அரசை வீழ்த்தும் நோக்கத்துடன் இனவாத குழுக்களை ஏவிவிட்டு, யுத்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் மீண்டுமொரு இனக்கலவரத்தை தூண்டி விடுவதன் மூலம் தங்களது இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சித்தவர்கள், இன்று நல்லாட்சியின் பிரதான பங்காளர்களாக இருக்கின்றனர்.


இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரணி பிரதேசத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் மஹிந்தவுக்காண தமிழர் அணியின் ஒன்றுகூடல் நிகழ்வில் (22/07/2017) இன்று சிறப்புரை நிகழ்த்திய தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண கொள்கைப் பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் மேலும் குறிப்பிடுகையில் 

பலதடவைகள் முயற்சித்தும் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது, மக்களால் ஓரம் கட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கனுப்பிவிட்டு ஆட்சியை தனதாக்கிக் கொள்ள ஏவிவிட்ட இனவாதமே கடைசியில் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. 

அதற்காகவே ஞானசார என்ற இனவாத சாவியின் மூலம் இனவாதத்தை திறந்து விட்டிருந்தார்.

அந்த இனவாதத்தின் வெளிப்பாடு இன்றுவரை நீடிக்கிறது. ஆனால் மஹிந்த இப்போது ஜனாதிபதி இல்லை.

மஹிந்த அரசாங்கத்தை இனவாத அரசாங்கம் என சிறுபான்மையர் சமூகத்தை மூளைச்சளவை செய்து பெற்றுக் கொண்ட ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தன் தவறுகளை மறைப்பதற்காகவும் இன்றுவரை மஹிந்த ராஜபக்ஷவை பந்திக்கு இழுக்கும் அரசியலைத்தான் நல்லாட்சியும் அதில் தங்கியிருப்பவர்களும் செய்கிறார்களே தவிர இவர்கள் ஆக்கபூர்வமான அரசாங்கம் ஒன்றை நடத்துவதாக எமக்கு தெரியவில்லை.

மஹிந்தவை மாத்திரம் விமர்சிப்பதற்கு ஒரு அரசாங்கம் தேவைதானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக தற்போது எழுப்பப்படுகிறது. இதன்விளைவு என்னவென்பதை நல்லாட்சி மிகவிரைவில் கற்றுக்கொள்ளும், சாண் ஏற முழம் சறுக்கும் இந்த நல்லாட்சி இன்னுமொரு தேர்தலை எதிர் கொண்டால், படுதோல்வியடைந்து மூலையில் முடங்குவது உறுதியாகிவிட்டது. இனியும் மக்கள் நல்லாட்சியை நம்பி பயணிப்பதற்கு தயாராக இல்லை என்பது நாடளாவிய ரீதியில் மஹிந்தவுக்கு பெருகிவரும் ஆதரவை பறைசாட்டி நிற்கிறது.

இனவாத விசமிகளால் நோகடிக்கப்பட்ட முஸ்லிம்கள், குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து மஹிந்தவின் பக்கம் இணைந்துவருகிறார்கள்.

வடகிழக்கில் இருக்கும் நன்றி கெட்ட நாங்கள் இப்போதாவது அவரது கரங்களை பலப்படுத்தி அந்த இரும்பு மனிதனை ஆட்சி பீடம் ஏற்றி வெற்றி காண்போம்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:

பின்கதவால் வந்து ஆட்சி செய்யும் திருடர்கள் கோழைகளால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அப்படி முடியும் என்றால் அதுபகல் கனவுதான்.


நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் அது மஹிந்தவால் மட்டுமே முடியும். அதற்கு அவர் மீண்டும் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என தெரிவித்தார்.

மஹிந்தவை விமர்சிப்பதை விட இந்த நல்லாட்சி நாட்டுக்குச் செய்த நல்லது என்ன? மஹிந்தவை விமர்சிப்பதை விட இந்த நல்லாட்சி நாட்டுக்குச் செய்த நல்லது என்ன? Reviewed by Madawala News on 7/22/2017 07:03:00 PM Rating: 5