Kidny

Kidny

மஹிந்த ராஜபக்ஷ செய்த அநா­வ­சிய செயற்­பா­டு­களே தற்­போது பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளன.


முன்­னைய அர­சாங்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ செய்த அநா­வ­சிய செயற்­பா­டு­களே தற்­போது பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளன. மஹிந்த ராஜபக் ஷ செய்த தவ­று­க­ளுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே பொறுப்பு கூற­வேண்­டி­யுள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.


தவ­றாக  மேற்­கொண்ட வேலைத்­திட்டம் மூல­மாக இன்று பண்­டா­ர­வளை நகரம் முழு­மை­யாக பாதிப்­புக்கு உள்­ளாகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. 7 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் வீடுகள் பாதிப்­புக்கு உள்­ளாகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.  

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது 

தற்­போது உமா­ஓ­யாவில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் வழ­மை­யாக ஒரு சுரங்க வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் போது ஏற்­படும் பிரச்­சி­னை­யாகும். இவ்­வாறு பல்­வேறு பிரச்­சி­னைகள் இதற்கு முன்­னரும் இடம்­பெற்­றுள்­ளன. கொத்­மலை திட்டம் ஆரம்­பிக்கும் போதும், மேல் கொத்­மலை திட்டம் உரு­வாக்­கப்­பட போதும்  சம­னல ஆறு திட்­டத்­திலும் இந்த பிரச்­சி­னைகள் எழுந்­தன.ஆனால் ஏனைய திட்­டங்கள் போல உமா­ஓயா திட்­டத்தை கூற முடி­யாது. 

இது முழு­மை­யாக அர­சியல் வாதி­களின் தனிப்­பட்ட தேவைக்­கா­கவே நடந்­தே­றி­யது. உமா­ஓ­யாவின் தண்ணீர் மகா­வலி கங்­கைக்கே சென்­றது. ரந்­த­னி­களை, ரன்­தெம்பை நீர்த்­தேக்­கங்­களை இலக்கு வைத்து கொண்­டு­செல்­லப்­பட்­டது. இந்த தண்­ணீரை மெத­மு­ல­னைக்கு கொண்­டு­செல்ல தீர்­மா­னிக்­கப்­பட்­ட­மையே பிர­தான பிரச்­சி­னை­யாகும். 

அனு­ரா­த­புரம், பொல­ந­றுவை பகு­தி­க­ளுக்கு வழங்க வேண்­டிய நீரை பண்­டா­ர­வளை ஊடாக மெத­மு­ல­னைக்கு கொண்­டு­செல்ல முயற்­சித்­த­மையே  இன்று பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அப்­போது இந்த திட்டம் வேண்டாம் என அர­சாங்­கத்தில் இருந்த பலர் தெரி­வித்தோம். ஆனால் நாம் விடுத்த எச்­ச­ரிக்­கையை சிறி­த­ளவும் கவ­னத்தில் கொள்­ளாது அவர் இந்த வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுத்தார். இந்த திட்­டத்தை முன்­னெ­டுக்கும் பணி  ஈரா­னுக்கு வழங்­கப்­பட்­டது. அதுவும் உண்­மையில் இதற்கு செல­வாகும் நிதியை விடவும் நான்கு மடங்கு அதி­க­ரிப்பில் இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இவர்கள் மோச­மாக  முன்­னெ­டுத்த தொழி­நுட்ப திட்­டங்கள் மூலம் இன்று மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்தல்  ஏற்­பட்­டுள்­ளது. 

முழு­மை­யாக தவ­றான முறையில் மேற்­கொண்ட வேலைத்­திட்டம் மூல­மாக இன்று பண்­டா­ர­வளை நகரம் முழு­மை­யாக பாதிப்­புக்கு உள்­ளாகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. 7 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் வீடுகள் பாதிப்­புக்கு உள்­ளாகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. 

முன்­னைய தலைவர் செய்த தவ­றுக்­காக இப்­போ­தைய தலை­மை­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எந்த பலனும் இல்லை. தவறிழைத்த மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்தே போராடவேண்டும். அவர் செய்த குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார். 


மஹிந்த ராஜபக்ஷ செய்த அநா­வ­சிய செயற்­பா­டு­களே தற்­போது பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளன. மஹிந்த ராஜபக்ஷ செய்த அநா­வ­சிய செயற்­பா­டு­களே தற்­போது பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளன. Reviewed by Madawala News on 7/03/2017 10:45:00 AM Rating: 5