Ad Space avaiable

யாழ் துப்பாக்கி சூடு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல; பொலிஸார் தெரிவிப்பு ..


யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்குவைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் - நல்லூரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 2 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


மேலும் குறித்த சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட செயல் அல்ல எனவும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்ட போது நீதிபதியின் மெய்பாதுகாவலர் அதனை வாகனங்களை அப்புறப்படுத்த முற்பட்ட போது ஏற்பட வாய்தர்கத்தில் போதையில் இருந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில், நீதிபதிக்குப் பாதிப்புகள் ஏற்படாத போதிலும், 2 பொலிஸார் காயமடைந்து, அதிலொருவர், இன்று நள்ளிரவு காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ் துப்பாக்கி சூடு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல; பொலிஸார் தெரிவிப்பு .. யாழ் துப்பாக்கி சூடு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல; பொலிஸார் தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 7/23/2017 01:09:00 PM Rating: 5