Kidny

Kidny

நல்லாட்சியில் மேலோங்கும் பௌத்த ஆதிக்கம் !


இலங்கை நாட்டில் பௌத்த மதகுருக்களுக்கு எப்போதும் ஒரு நிலையான இடம் இருக்கும். தற்போது பௌத்த மத குருக்களின் ஆதிக்கமானது எல்லை மீறிச் செல்கின்றதா என சிந்திக்கும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை பௌத்த மதகுருக்கள் அமைத்து வருகின்றனர். 


அண்மையில் இலங்கை அரசியலமைப்பு மாற்ற முயற்சி மற்றும் ஞானசார தேரரின் கைது ஆகிய விடயங்களில் அஸ்கிரிய பீடமானது தனது தலையை நுழைத்திருந்த நிலையில் தற்போது அஸ்கிரிய பீடமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முடிவு செய்துள்ளது.இவைகள் பல விடயங்களை எமக்கு சுட்டிக் காட்டுகின்றன.


இச் செய்தியானது அஸ்கிரிய பீடமானது இலங்கை நாட்டின் அரசியலினுள் மிகப் பெரும் தாக்கம் செலுத்த முனைவதை சுட்டிக் காட்டுகிறது.கடந்த ஆட்சிக் காலங்களின் போது பௌத்த மத ஆதிக்கங்களுக்கு இத்தனை அதிகாரம் இருந்திருக்கவில்லை. தற்போதைய ஆட்சியில் ஜனாதியாக மைத்திரி இருந்தாலும் இலங்கை நாட்டை என்னவோ பௌத்த ஆதிக்கமே ஆண்டு வருகிறது. 


இதற்கு இவ்வரசு ஞானசார தேரர் போன்றோரின் கோரிக்கைகளுக்கு வழங்கிய முக்கியத்துவம் பிரதான காரணமாக அமைத்திருக்கலாம். ஞானசார தேரரின் கோரிக்கைகளுக்கே இத்தனை வலுவென்றால் அஸ்கிரிய பீடங்களின் கோரிக்கைகள் எத்தனை வலுவானது?


ஜனாதிபதி மைத்திரி தனது செயற்பாடுகள் அனைத்தையும் தன்னோடு வைத்துள்ள சில பௌத்த மத குருக்களின் பேச்சுக்களுக்கு அமைவாகவே அமைத்து வருகின்றாராம் என்ற பேச்சுக்கள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சி செய்ய ஆரம்பித்த காலப்பகுதியில் வெளிப்பட்டிருந்தன. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரி கையாண்ட வழி முறைகளே இன்று இலங்கை நாட்டையே பௌத்த மதம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் கொண்டு சேர்த்துள்ளது. இலங்கை முஸ்லிம்கள் ஞானசார தேரர் போன்ற ஒரு சில தேரருக்கு முடிவு கட்ட கொண்டு வந்த இவ்வாட்சியானது இலங்கை நாட்டையே பௌத்த ஆதிக்கத்திடம் தாரை வார்த்துக்கொடுத்துள்ளது. 


நிலைமை இவ்வாறு இருப்பினும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது சுக போகங்களை கருதி இவ்வரசுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளனர். இன்னும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு குற்றம் சுமத்துபவர்களும் இல்லாமலில்லை.கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை கண்ணுற்று முஸ்லிம் மக்கள் எவ்வாறு எடுத்தார்களோ அவ்வாறே முஸ்லிம் அரசியல் வாதிகளை புறக்கணித்த முடிவுகளை எடுக்குமொரு கால கட்டத்தில் உள்ளோம் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 -அ அஹமட்-


நல்லாட்சியில் மேலோங்கும் பௌத்த ஆதிக்கம் ! நல்லாட்சியில் மேலோங்கும் பௌத்த ஆதிக்கம் ! Reviewed by Madawala News on 7/14/2017 11:26:00 PM Rating: 5