Ad Space avaiable

டெங்கு ! மொரட்டுவ பல்கலைகழகத்திற்கு பூட்டு ..


மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உள்வாரி கற்பித்தல் நடவடிக்கைள் அனைத்தும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்தார். 


பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் டெங்கு தீவிரமடைந்துள்ளதனாலேயே கற்பித்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



பல்கலைக்கழக சூழலில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அவர் மேலும் குறிப்பிடுகையில், 


மாணவர்கள் மத்தியில் டெங்கு பரவி வருகிறது.அதனால் மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.விடுதியில் தங்கியிருப்பவர்கள் அதிகளவான அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். 


எனவே பல்கலைக்கழகத்தின் உள்ளக ரீதியிலான கற்கை நடவடிக்கைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நிறுத்துவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதேவேளை பல்கலைக்கழக வளாக சூழலையும் விடுதியையும் சுத்தம் செய்யும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இருந்தபோதிலும் பல்கலைக்கழ வளாகத்தை அண்டிய வெளிப்பிரேதசத்தில் டெங்கு அவதானம் உள்ளது. ஆகவே விடுமுறை காலத்தில் அது தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தவுள்ளோம். 


மேலும் குறித்த விடுமுறை காலப்பகுதியில் உள்ளக ரீதியிலான கற்கை நடவடிக்கைகள் நிறுதத்தப்படுகின்ற போதிலும் வெளிவாரி கற்கை நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன் அலுவலக நடவடிக்கைகளும் வழமைபோல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு அபாயத்திற்கு உடனடியாக தீர்வு முன்வைக்குமாறுகோரி மாணவர்கள் நேற்று காலை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


டெங்கு ! மொரட்டுவ பல்கலைகழகத்திற்கு பூட்டு .. டெங்கு ! மொரட்டுவ பல்கலைகழகத்திற்கு பூட்டு .. Reviewed by Madawala News on 7/02/2017 10:27:00 AM Rating: 5