Ad Space avaiable

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும்  ஒப்பந்தம் நாளை கைச்சாத்து !


ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (28) அறிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்படவுள்ளது.

வரைவு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைது துறைமுகங்கள் அதிகாரசபைக்கும் ச்சைனா மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிட்டெட் (China Merchants Port Holdings Company Limited) என்ற சீன நிறுவனத்துக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. 

இந்த ஒப்பந்தமானது கைச்சாத்தாகும் தினத்தில் இருந்து 99 வருட அதிகாரப்பூர்வகாலத்தை கொண்டதாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும்  ஒப்பந்தம் நாளை கைச்சாத்து ! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும்  ஒப்பந்தம் நாளை கைச்சாத்து ! Reviewed by Madawala News on 7/28/2017 02:31:00 PM Rating: 5