tg travels

பிரதமரின் கூற்று தொடர்பில் அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி ..


அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு.சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் பச்சைப் பொய்யாகும் என அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட சகோதர்கள் தெரிவிக்கின்றனர்.


பாராளுமன்றத்தில் 05.07.2017 அன்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கூறியிருந்தார்.



பிரதமரின் கூற்று தொடர்பில் அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரை நாம் தொடர்ப்பு கொண்டு கேட்டபோது ,



அளுத்கம - தர்ஹாநகர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய கடைகள் வீடுகளை, திருத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் ஓரளவு நிவாரணம் வழங்கப்பட்டது எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை.அதற்காக மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இழப்பீடுகள் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.சுமார் 25 கேடி ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கணக்கிடப்பட்டது.இந்த விடயம் நல்லாட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


மஹிந்த அரசாங்கம் சோதமான சொத்துக்களை புனரமைப்பு செய்து தந்தனர். சில வேலைகளில் அந்த அரசாங்கம் தொடர்ந்து இருந்திருந்தால் எமக்கு இழப்பீடு கிடைத்திருக்கலாம்.நாம் இந்த அரசாங்கம் அலுத்கமைக்கு நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுதரும் என எதிர்பார்த்து வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.


மேலும் இந்த சம்பவத்தில் படுகொலையுண்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் இன்றும் கஷ்டத்தில் உள்ளன. பலகோடி சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றுக்கு நிவாரணமோ நஷ்டஈடோ வழங்கப்படவில்லை.எல்லாவற்றையும்விட இந்த வன்முறையுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை.


இதுதான் உண்மையான நிலவரம் ஆகும். இதைவிடுத்து பிரதமர் ரணில் நாட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும், முஸ்லிம்களையும் தவறாக வழிநடத்தியுள்ளார் என அலுத்கமை சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர்.


சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ள அதேவேளை 


அது பொய்யான தகவல் எனவும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றால் இதுவரை சூத்திரதாரிகளை கைது செய்யாமிலிருப்பது ஏன் எனவும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமலிருப்பது ஏன், நஷ்டஈடு வழங்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர் விபரங்கள், அவற்றைப் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்களை பிரதமர் ரணில் பகிரங்கப்படுத்துவாரா எனவும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஏற்கனவே பிரதமருக்கு சவால் விடுத்தார்.

பிரதமரின் கூற்று தொடர்பில் அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி .. பிரதமரின் கூற்று தொடர்பில் அலுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி .. Reviewed by Madawala News on 7/08/2017 11:25:00 AM Rating: 5