tg travels

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய திட்டம் !


சப்ரகமுவ,வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இவ்வருடம் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தேர்தலை முகம் கொடுப்பது அரசாங்கத்திற்கு ஆபத்தானது என அரசுக்கு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அரச உயர்மட்டம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதே நேரம் இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சப்ரகமுவ,வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய  கூறியுள்ளார்.


உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்வரும் வாரங்களின் உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் அதன் ஊடாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்பட்டுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.


உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய திட்டம் ! உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய திட்டம் ! Reviewed by Madawala News on 7/23/2017 11:30:00 AM Rating: 5