tg travels

பௌத்த மதத்துக்கு உள்ள முன்னுரிமை அரசியலமைப்பில் நீக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருக்கப்போவதில்லை ..


பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை அரசியல் அமைப்பில் நீக்கினால் இந்த அரசாங்கத்தில் தான் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என அமைச்சர் அர்ஜுன றணதுங்க குறிப்பிட்டுள்ளார்.


புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் எதுவித வரைவுகளும் வெளிவராத நிலையில் இது போலி பிரசாரம் எனவும் தெரிவித்துள்ள அவர் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை அரசியல் அமைப்பில் வழங்கப்படும் எனவும் இதர மதங்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்துக்கு உள்ள முன்னுரிமை அரசியலமைப்பில் நீக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருக்கப்போவதில்லை .. பௌத்த மதத்துக்கு உள்ள முன்னுரிமை அரசியலமைப்பில் நீக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருக்கப்போவதில்லை .. Reviewed by Madawala News on 7/05/2017 04:38:00 PM Rating: 5