Ad Space Available here

ஹிட்லரும் இவரைப்போல்தான் சிந்தித்திருப்பாரோ....?


கட்சியின் தலைவராக தானிருந்தாலும் தீர்மானங்கள் எடுக்கும்போது செயலாளருக்கும் அதிகாரங்கள் இருக்கவேண்டும், அப்போதுதான் தான்தோன்றித்தனமாக யாரும் செயல்படமுடியாமல் இருக்கும் என்ற என்னத்தின் காரணமாகவே அன்றய தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் இந்த அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை கட்சிக்குள் ஏற்படுத்தியிருந்தார்.அதனால் தனக்கு பாதகமாக அந்த பதவியிருந்தாலும் தன்னையும் தட்டிக்கேட்கும் ஒரு பதவி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இன்றய தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்கள் அந்த அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவந்தது மட்டுமல்ல,

சகல அதிகாரம் பொருந்திய தலைவராகவும் தன்னை பிரகடணபடுத்தியுமுள்ளார்.

இந்த செயல்பாடுகள் ஒரு சர்வதிகாரியின் நிலைப்பாடுக்கு சமமான செயல்பாடுகள் என்பது நடுநிலைவாதிகளுக்கு தெறியாத ஒன்றல்ல, இந்த விடயத்தினை கட்சியிலுள்ள உயர்பீட உறுப்பினர்களோ, அந்த கட்சியின் போராளிகளோ கண்டுகொண்டதாக தெறியவில்லை, அதனை தலைவர் ஹக்கீம் அவர்கள் தனக்குச் சாதகமாக அதனை நன்றாகவே பயன்படுத்திவருகின்றார்.

நாடு இன்றிருக்கும் நிலையில், இந்த சகல அதிகாரம் பொருந்திய தலைவர் பதவி என்பது சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்குமா என்பது சந்தேகமே; காரணம் கடந்த காலங்களில் 18வது திருத்தச்சட்டம், தெவிநெகும சட்டம், கடந்த கிழக்குமாகாண தேர்தலில் யாருடன் கூட்டுச்சேர்வது என்ற விடயம், அதேபோன்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறிய விடயம் போன்றவற்றில் பலகோடிகள் கைமாறப்பட்டதாக அந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்களாக இருந்தவர்களே இப்போது கூறிவருகின்றார்கள்.

அப்போது சில விடயங்களில் அந்த கட்சியின் அன்றய செயலாளர் நாயகமாக இருந்த ஹசனலி அவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்ற விடயமும் அதன் தலைவர் ஹக்கீம் அவர்களாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.அதன் காரணமாகவே இந்த செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்சிக்கள் இரு அதிகாரங்கள் இருக்ககூடாது அது கட்சியை வழிநடத்த தடையாக இருக்குமென்று கட்சியின் இன்றய தலைவரின் கண்டுபிடிப்பை தற்போதைய கட்சிப்போராளிகள் சரிதான் என்று ஆமாச்சாமி போடுவதன் மூலம், முன்னால் தலைவர் அஸ்ரப் அவர்களின் சிந்தனை சரியில்லை என்று மறைமுகமாக சொல்லவரும் விடயமானது மிகவும் கீழ்தரமான என்னம் என்பதை யாரும் அறியாதவர்கள் போல் நாடகமாடுவது மிகவும் வேதனைக்குறிய விடயமாகும்.

இந்த செயலாளர் பதவி என்பது கட்சியை வழிநடத்துவதற்கு தடையாக இருக்கின்றது என்ற காரணத்துக்காக அதன் அதிகாரம் குறைக்கப்பட்டது என்றால், அதன் தாக்கம் எந்தளவு தற்போதைய தலைவருக்கு தடையாக இருந்துள்ளது என்பது புலனாகும்.

இதன் உள்நோக்கத்தை கட்சியின் உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் அதனை தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பதே உண்மையாகும். 

தனக்கு அந்த பதவி கிடைக்காமல் மற்றொருவருக்கு அதனை வழங்கினாலும் பரவாயில்லை, தயவு செய்து செயலாளர் பதவியின் அதிகாரத்தை குறைத்து விடாதீர்கள் என்ற ஹசனலி அவர்களின் கூக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்குச் சத்தமாய் போய்விட்டது.

இந்த மாபெரிய துரோகத்தனத்தை மறைப்பதற்கு, வழமைபோல் பதவி கேட்டு பிரச்சினைப்படுகின்றார்கள் என்ற கோசத்தை ஓங்கி ஒலித்துக்கொண்டு (முழு பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள்) மறைக்கும் விடயத்தில் வெற்றிகண்டு வருகின்றார் தலைவர் ஹக்கீம் அவர்கள். அதற்கு துணையாக கட்சிதான் கதி என்று கிடக்கும் சுயநலம் கொண்ட உயர் மட்ட உறுப்பினர்களும், அதன் போராளிகள் என்று கூறிக்கொள்ளும் ஏமாளிகளும் இருந்துவருகின்றார்கள்.

ஆகவே கட்சியை ஆரம்பித்த தலைவரே இது தேவையான ஒன்று என்று சிந்தித்து வைத்த இந்த செயலாளர் பதவியை, தனக்கு எதிராக உள்ளது என்று நினைத்து கொண்டு, அந்த அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை மாற்றுகின்ற தற்போதைய தலைவரை கண்டுகொள்ளாமல் இருக்கும் கோமாளிகளை என்னவென்று சொல்வது. 

இப்படி ஒருவரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பது என்பது எதிர்காலத்தில் சமூகத்துக்கு நல்லதா? அல்லது அந்த தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உகந்ததா ? என்பதை காலந்தான் பதில் சொல்லவேண்டும்.

பொருத்திருந்து பார்ப்போம்..!

எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

ஹிட்லரும் இவரைப்போல்தான் சிந்தித்திருப்பாரோ....? ஹிட்லரும் இவரைப்போல்தான் சிந்தித்திருப்பாரோ....? Reviewed by Madawala News on 7/23/2017 10:35:00 PM Rating: 5