Ad Space Available here

மனப்பாங்கின் ஆபத்து!எம்.எம்.ஏ.ஸமட்-
சமூக விரோத ஆளுமைக் குறைபாடுகள் உடைய ஆபத்துமிக்க மனப்பாங்கு கொண்டவர்களினால்
நாட்டில் இடம்பெறுகின்ற கொலை, கொள்ளை, சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச்செயல்கள் சமூகப் பிரச்சினைகளாக உருவெடுத்;;து நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இவை நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ஆரோக்கியமற்ற நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது.

ஆபத்துமிக்க மனப்பாங்கு கொண்டவர்களினால் உருவாக்கப்படுகின்ற சமூகப் பிரச்சினைகளை சமூகங்களின் மத்தியிலிருந்து ஒழிப்பதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளில் ஒவ்வொரு ஆரோக்கியமுள்ள இலங்கைப் பிரஜையும் பங்குகொள்வது காலத்தின் தேவையாகவுள்ளது.

குறிப்பாக இலங்கையின் தென்னிலங்கைப் பிரதேசங்களில்; பெரும்பான்மையின சமூகத்தின் மத்தியில் அதிகரித்துவரும் இச்சமூகப் பிரச்சினைகளைக் கட்டுப்டுததுவதற்கு அக்கறை கொண்டு அதற்கான ஆரோக்கியமான ஆண்மீக வழிகாட்டல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்க வேண்டியது அச்சமூகத்தின் மதப் போதகர்களின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் காவலர்களாகக் கொக்கரிக்கின்ற ஒரு சில போதகர்கள் தங்களது பணிகளை மறந்து, இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் சமூக, சமய, கலாசார விடயங்களைக் கொச்சைப்படுத்தியும், ஒரு சில முஸ்லிம் பெயர்தாங்கியவர்களினால் புரியப்படுகின்ற பலவீனமாக செயற்பாடுகளை தங்களின் இனவாதப் பரப்புரைகளுக்கான ஊக்கிகளாக் கொண்டும் பெரும்பான்மைச் சமூகத்தவர் மத்தியில் அவற்றைப் பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது.

குற்றச் செயல்களின் அதிகரிப்பும், இனவாத தூண்டுதல்களின் கோலோச்சமும் மேலோங்கியுள்ள நிலையில், சமூகப் பிரச்சினையாகக் கருதப்படும் டெங்கு நுளம்புக் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அதற்கான மனப்பாங்கும் அவசியமாகவுள்ளது. கடந்த வருடங்களை விடவும் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் டெங்கு நுளப்பின் தாக்கம் அதிகரிப்பதற்கு எதிர்மறை மனப்பாங்கு கொண்டவர்களின் செயற்பாடுகளும் வழிகோலியிருக்கிறது.

டெங்கு நுளம்புகளின் பெருக்கத்;தைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினாலும், அமைச்சுசார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்படுகின்ற விழிப்புணர்வையும் அதன் பொறுப்பையும் மக்கள் முறையாக உணர்ந்துகொள்ளவில்லை. அவற்றின்பால் முழுமையான அக்கறை செலுத்தவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. உயிர்கொல்லி டெங்கு நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்பத்தும் பொறுப்பானது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் உரியது என்ற மனப்பாங்கு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். இவ்வாறு அக்கறைகொள்ளாத மனப்பாங்குகளின் ஆபத்தானது பலரின் உயிர் அநியாயமாக பலியாவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

சமூகப் பிரச்சினையில்; டெங்கு

'சமூகத்துக்குப் பாரிய அளவில் சவாலாக அமையும் அல்லது பலரின் அபிலாஷைகளுக்கு சவாலாக அமையும் மனித செயற்பாடுகளே சமூகப்பிரச்சினை' என உளவியலாளர்களால் வரையறை செய்யப்படுகிறது. அந்த வரையறையின் பின்னணியில் நுளம்புகள் பெருகுவதற்கான மனித செயற்பாடுகள் எவ்வித சமூக உணர்வுகளுமின்றி இடம்பெறுவதைக்; காண முடிகிறது. குறிப்பாக தாம் வாழும் சூழலையும,; சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்ற போதிலும், அவற்றைப் பொறுப்படுத்தாது பலர் சுற்றுப்புறச் சூழலை அசிங்கப்படுத்துவதோடு டெங்கு நுளம்புகள் பெருகி வளர்வதற்கு வாய்ப்பளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, தத்தமது இல்லங்களிலும், நிறுவனங்களிலும் சேரும் திண்மகக் கழிவுகளை ஒழுங்கான முறையில் சுத்தப்படுத்தாது அல்லது அவற்றை சுத்தப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களிடம் முறையாக ஒப்படைக்காது. தெருவோரங்களிலும், வடிகான்களிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கறைகளிலும் வீசிவிடுகின்றனர். தங்களின் ஆரோக்கியத்தில் மாத்திரம் அக்கறைகொள்ளும் மனப்பாங்குகொண்டவர்களின் ஆபத்தான செயற்பாடுகள் பிறரை ஆபத்துக்குள் தள்ளி விடுகின்றன.

தற்கொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள், கொள்ளை, வன்முறைகள் என மலிந்து விட்ட சமூகச் சீர்கேடுகளின் வரிசையில் நாகரியமற்ற மனிதர்களின்; செயற்பாடுகளினால் கட்டுப்படுத்த முடியாதுள்ள டெங்கு அதிகரிப்பானது ஆரோக்கியமான வாழ்வைக் கேள்விக்குரியாகியிருக்கிறது. மனித அபிலாஷைகளுக்கு தடையாக அமையும் சமூகப் பிரச்சினையானது ஒருவருக்கு அல்லது முழுச் சமூகத்துக்கும் தாக்கம் செலுத்தும். சமூகத்தினுள்ளிருந்தே உருவாக்கப்படும், சமூகத்துக்குப் பாதமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய பண்புகளைக் கொண்ட சமூகப் பிரச்சினைகளாகக் கருதப்படும் குற்றச்செயல்களுடன் டெங்கு நுளம்புகளின் பெருக்கமும் அதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்களும் பெரும் சமூகப் பிரச்சினைக்குள்ளாகிவிட்டதை சமகாலத்தில் உணர முடிகிறது.

டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு போராடி வருகிறது. டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நுளம்பு விருத்திக்கான சூழலை ஏற்படுத்துபவர்களுக்கெதிராக சட்ட நடடிவக்கைகளும் எடுக்கப்படுகிறது. தண்டனைகளும் வழங்கப்படுகிறது. தண்டங்களும் விதிக்கப்படுகின்றன. இருந்தும், இன்னும் அத்திட்டங்களோ அல்லது அச்சட்ட நடவடிக்கைகளோ வெற்றியடைளித்ததாகத் தெரியவில்லை. இதற்கான காரணம் என்னவென்று சமூக உளவியல் கண்ணோட்டத்தில் நோக்குகின்றபோது, பொதுவான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்றுச் செயற்படுவதற்கான அல்லது செயற்படுத்துவதற்கான மனப்பாங்கு பலர் மத்தியில் இன்னும் ஏற்படவில்லை. அல்லது ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு, டெங்கு நுளம்புக்கள் பெருகக் கூடிய இடங்கள் சூழலில் காணப்படுகின்றன அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய உள்ளுராட்சி அதிகாரிகளிடம் சாதாரண மக்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும், அம்முறைப்பாடுகளை ஏற்று அவை தொடர்பில் உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனநிலை அதிகாரிகளிடமும் உருவாகமலிருக்கிறது. பதவிகளைப் பற்றிப் பெருமை பேசுகின்றவர்கள் அப்பதவிகளுக்குரிய பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என்ற மனப்பாங்கை உருவாக்காமலும் இருக்கிறார்கள். இவற்றை டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்களும,; சட்டதிட்டங்களும் வெற்றியளிக்காமலிருப்பதற்கான ஏதுநிலையாகக் கருதவேண்டியுள்ளது.

செயற்றிட்டங்களுக்கு உதவ வேண்டும.; சட்டதிட்டங்களை மதித்து நமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு உருவாகின்ற போது, அவை சமூகப் பொறுப்பாகக்; கருதப்படுகின்றபோதுதான் நுளம்புப் பெருக்கம் தொடர்பான இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மனப்பாங்கு மாற்றமும் விளைவுகளின் தவிர்ப்பும்

ஒரு நபர் பற்றி, ஒரு பிரச்சினை பற்றி, ஒரு நிகழ்வு பற்றி அல்லது வேறு விடயங்கள் பற்றி சார்பளவில் ஏற்படுத்திக்கொள்ளும் உறுதியான விளக்கம், மதிப்பீடு மற்றும் விரும்பம்தான் 'மனப்பாங்கு' என சமூகவியல் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 'நீங்கள் ஒரு விடயத்தை விரும்பாவிடின் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு அதனை மாற்ற முடியாதெனின் அது பற்றிய உங்களது சிந்தனையை மாற்றுங்கள்' என உளவியலாளர் 'மேரி ஏங்கல்பிரீத'; குறிப்பிடுகின்றார்.

நாம் விரும்பாத ஒன்று நடைபெறுகின்ற போது அதை மாற்ற முயலவேண்டும் அதற்கு முன் நாம் நமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும். உறுதியான, நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் நடத்தைகளினூடாக நமது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும.; அந்த மாற்றத்தின் மூலம் சமூகப் பொறுப்புகள் எவை என்பதை உணர முடியும். அவ்வாறு உணரப்படுகின்றபோது இந்த டெங்கு நுளம்புப் பெருக்கம் என்ற பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படும்.

நுளம்புக் கடியிலிருந்தும் அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் அயலவர்களையும் காப்பாற்ற வேண்டிய சமூகப் பொறுப்பும் அக்கறையும் ஆரோக்கிமுள்ள நம் அனைவருக்கும் உரியது. நம்மில் பலரிடத்தில் இவ்வக்கறையானது இல்லாமால் போய்விட்டது. இவ்விடயத்தில் பொடுபோக்குக் காட்டப்படுகிறது. இவ்வாறு செயற்பட்டு; நுளம்புத்தாக்கத்தினால் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்படுகின்றபோது அதனால் ஏற்படுகின்ற சோகங்களைச் சுமைகளாக்கிக் கொள்கின்றனர். அதிகாரிகள் சோதனையிட வருகிறார்கள் என்றால் அவர்களின் சட்டங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வதற்காக வீட்டுச் சூழலையும் தொழில் நிறுவனம் மற்றும் பாடசாலைச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கும் பலர் அவற்றைத் தொடர்ச்சியாகச் சுத்தமாக வைத்திருந்து நுளம்புகள் பெருகுவதைத் கட்டுப்படுத்தி அவற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற முயற்சிக்காமல் இருப்பது தவறைத் தவறென்று தெரிந்தும் தவறு செய்வதாகவே அமைகிறது.

பதவி நிலை அதிகாரிகளினதும், பணியாளர்களினதும், மக்களினதும் மனோநிலையானது இந்நோய் தொடர்பிலும் இவற்றைத் தடுப்பது தொடர்பிலும் அக்கறைகொள்ளப்;படாத நிலையில், இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகாரிகள், பணியாளர்கள் மத்தியிலும் டெங்கு ஒழிப்புக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற மனப்பாங்கு மக்கள் மத்தியிலும் உருவாக வேண்டும். இவ்வாறு மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத வரையில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க முடியாது.

அதுமாத்திரமின்றி, டெங்குக் காய்ச்சல் தொடர்பில் அலட்சியப்போக்கை கைவிடுதல் அவசியமானது. இந்நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் உடன் வைத்தியரை நாடி அதற்கான சிகிச்சைகளை உடன் பெற்றுக்கொள்ளுதலும் முக்கியமானது. இருப்பினும் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினாலும் ஏனைய தொண்டு நிறுவனங்களினாலும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்ற போதிலும் பலர் இதற்கான சிகிச்சையை வேளைக்கு மேற்கொள்வதில் அசமந்தப்போக்கைக் கடைப்பிடிப்பதனால் உயிர் ஆபத்தைக் கூட எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது.

இவற்றைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் கிராமப் புறங்களிலுள்ள வைத்திசாலைகளில் டெங்கு நோய்க்கு சிகிச்சைளிப்பதற்காக விஷேட பயிற்சி பெற்ற வைத்திய நிபணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், டெங்குக் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில் மக்களின் அக்கறை திருப்தியளிப்பதாவில்லை என சுகாதாரத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்படி இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜுன்; மாதம் வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 76,077 பேர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் மேல் மாகாணத்தில் 43 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை கொழும்பு மாவட்டத்தில் 17,246 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11,181 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4,337 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 4,700 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4,331 பேரும் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நுளம்புத் தாக்கத்தினால் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 226 பேர் உயிர் இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் 80க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, பல்கலைக்கழகம் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பின் பாதிப்பின் வேகம் அதிகரித்து 76 ஆயிரம் பேர் இக்காலம் வரையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் அதிகரித்து வருடம் கொடூர சம்பங்களும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆபத்துமிக்க மனப்பாங்கு கொண்டவர்களின் செயற்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் சகல மட்டங்களிலும் மனப்பாங்கு மாற்றத்திற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். அவ்வாறு முன்னெடுக்கப்படாத பட்சத்தில் ஆபத்து மிக்க மனப்பாங்கு கொண்டவர்களின் நடவடிக்கைகளினால் ஏற்படும் விiளைகளைத் தவிர்க்க முடியாது. அதற்கு டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கான செயற்பாடுகளும், இனவாதச் செயற்பாடுகளும் கூட விதிவிலக்கல்ல என்பதே யதார்த்தமாகும்.
மனப்பாங்கின் ஆபத்து! மனப்பாங்கின் ஆபத்து! Reviewed by Madawala News on 7/06/2017 07:31:00 PM Rating: 5