tg travels

நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்..


அரசாங்கத்தின் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற அபிவிருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

 

நேற்று பிற்பகல் அங்கு விஜயம் செய்த பிரதமர் இதுதொடர்பாக நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றில்; கலந்துகொண்டார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை, விவசாயம், கைத்தொழில் துறை அபிவிருத்தி மற்றும் விமான சேவையை விஸ்தரித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி குறித்து விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.; முதலீட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் விவசாயம் சார் துறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டது.

மத்தளை தொடக்கம் அம்பாறை வரையான பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

கப்பல்துறையில் கைத்தொழில் வலயமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் கிழக்கில், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளோம்.

முதலீட்டாளர்களை கிழக்கிற்கு அழைத்து வந்து சுற்றுலா முக்கித்துவம் மிக்க இடங்களில் முதலீடுகளை முன்னெடுத்து அதன் மூலம் கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.

மூன்று மாவட்டங்களான அம்பாறை,மட்டக்களப்பு திருகோணமலை ஆகியவற்றை அபிவிருத்தி செய்து நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்.. நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்.. Reviewed by Madawala News on 7/29/2017 10:59:00 AM Rating: 5