Kidny

Kidny

வக்பு சபையின் கோரிக்கைக்கு முஸ்லிம் எம்பிக்கள் செவி சாய்ப்பார்களா ??


 ARA.Fareel

இலங்கை முஸ்­லிம்கள் மீது கோட்டே மகா சங்க சபை­யினர் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலை­யினைக் கண்­ட­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும்.


இதற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம். எம்.யாசீன் கோரிக்கை விடுத்­துள்ளார்.


கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா­நா­யக்க தேரர் இத்­தே­பான தாம்­மா­லங்­கார அவர்­களின் கையொப்­பத்­துடன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட மகஜர் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே வக்பு சபையின் தலைவர் இவ்­வாறு தெரி­வித்தார்.


அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

“கோட்டே மகா சங்க சபை­யினர் இலங்­கையில் வாழும் சகல இனங்­க­ளுக்கு இடை­யிலும் மதங்­க­ளுக்கு இடை­யிலும் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்­ப­தற்­காக புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.


இதே­வேளை அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளமை ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­வை­யல்ல. சிங்­கள தேசி­ய­வாதக் கொள்­கையை நிலை நிறுத்திக் கொள்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.


எம்­மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று முஸ்­லிம்­க­ளான நாம் வாதிட்டுக் கொண்­டி­ருப்­ப­தை­விட  அது சட்ட ரீதி­யான ஒரு நிறு­வனம் மூலம் கூறப்­பட வேண்டும். இத­னா­லேயே இக் குற்­றச்­சாட்­டு­களை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்­ட­றிய சுயா­தீன ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென வக்பு சபை வலி­யு­றுத்­து­கி­றது.


பெரும்­பான்­மை­யின பேரி­ன­வா­திகள் நாம் கண்ட இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்­ர­ஸாக்­களை நிர்­மா­ணிக்­கிறோம் என்று குற்றச்  சுமத்­து­கி­றார்கள். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களால் பெரும்­பான்மை மக்கள்  முஸ்­லிம்­களைத் தவ­றாக எண்­ணு­கி­றார்கள். முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள் என்று கரு­து­கி­றார்கள்.


முஸ்­லிம்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மிக்க வந்­த­வர்கள் என்ற கருத்து மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது. இதனைப் பொய்­யென நிரூ­பிக்க ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிப்­பது அவ­சி­ய­மாகும் என்றார்.


கோட்டே மகா­சங்க சபையின் தேரர்கள் முஸ்­லிம்கள் பௌத்த மதத்­த­லங்­க­ளையும் புத்தர் சிலை­க­ளையும் அழிக்­கி­றார்கள். தங்கள் சனத்­தொ­கையை வேக­மாக அதி­க­ரித்துக் கொள்­கி­றார்கள்.


போதைப் பொருட்­களை நாட்­டுக்குள் கொண்டு வரு­கி­றார்கள். பௌத்­தர்­களை மதம் மாற்றுகிறார்கள். தொல்பொருள் பிரதேசங்களில் அத்துமீறி பிரவேசித்து தொல் பொருட்களை அழிக்கிறார்கள்.


வில்பத்து வன பிரதேசத்தை அழிக்கிறார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் காலூன்றி வருகிறது. எனும் முறைப்பாடுகளை மகஜர் மூலம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வக்பு சபையின் கோரிக்கைக்கு முஸ்லிம் எம்பிக்கள் செவி சாய்ப்பார்களா ?? வக்பு சபையின் கோரிக்கைக்கு முஸ்லிம் எம்பிக்கள் செவி சாய்ப்பார்களா ?? Reviewed by Madawala News on 7/10/2017 12:03:00 PM Rating: 5