tg travels

அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் :நிதி அமைச்சு

 


நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் விடயத்தில் கூடுதலான முன்னேற்றம் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிதியுதவியின் பெறுமதி 1640 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். 

 இவற்றில் சுமார் 1500 மில்லியன் டொலர்கள் கடன் உதவியாகும். எஞ்சிய தொகை உதவியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.  

பாதை மற்றும் பாலங்களை நிர்மாணிப்பதற்காகவே கூடுதலான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள், நீர்வழங்கல் செயற்திட்டம், மின்சாரம் போன்ற துறைகளுக்காக கூடுதலான நிதி செலவிடப்பட்டிருப்பதாக நிதியமைச்சின்வ ருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இருதரப்பு மற்றும் பல்தரப்பு அடிப்படையில் கிடைக்கப் பெற்ற நிதி இந்தச் செயற்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இருதரப்பு நிதியுதவிகள் சீனாவிடமிருந்து கூடுதலாக கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் பெறுமதி சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பல்தரப்பு உதவியின் பெறுமதி 345 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். உலக வங்கி மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களிடமிருந்து இந்த உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் :நிதி அமைச்சு அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் :நிதி அமைச்சு Reviewed by Madawala News on 7/03/2017 12:46:00 AM Rating: 5