tg travels

ஞானசார தேரரின் ஐந்து வருட போராட்டத்திற்கு தற்போது பலன் கிட்ட ஆரம்பித்துள்ளது. 


நாட்டில் தற்பொழுது என்ன நடைபெறுகின்றது என்பதை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் நன்கு  அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்,தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேரர் வெளியே வந்து குறிப்பிட்ட நபர்களுக்குரிய பாடத்தைப் புகட்டுவார் எனவும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் அறிவித்தார்.

பொதுபல சேனா காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,ஊடகவியலாளர் ஒருவர் ஞானசார தேரர் வருகை தராமைக்கான காரணம் என்னவென வினவிய போதே சுதந்த  தேரர் இவ்வாறு பதிலளித்தார்.

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஞானசார தேரர் ஈடுபட்டுள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவது மட்டுமல்லவே எமது அமைப்பின் செயற்பாடு எனவும் வழிமறித்து பதிலளித்த அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே கூறினார். 

தற்போது நாட்டில் அண்மைய வரலாற்றில் நாம் கண்டிராத இரு நிகழ்வாக அனைத்து பீடங்களும் ஒன்றினைந்து சிங்கள பௌத்தர்களின் பிரச்சினை தொடர்பில் இப்பொது பேச ஆரம்பித்துள்ளார்கள் ஞானாசார தேரரின் ஐந்து வருட போராட்டங்களுக்கு வெற்றி கிட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என டிலன்த விதானகே கூறினார். 

ஞானசார தேரரின் ஐந்து வருட போராட்டத்திற்கு தற்போது பலன் கிட்ட ஆரம்பித்துள்ளது.  ஞானசார தேரரின் ஐந்து வருட போராட்டத்திற்கு தற்போது பலன் கிட்ட ஆரம்பித்துள்ளது.  Reviewed by Madawala News on 7/11/2017 12:26:00 AM Rating: 5