tg travels

மத விட­யங்­களில் கை வைத்து பிக்கு­களை உசுப்­பேற்ற சதி !



மத விட­யத்தில் கை வைத்து தேரர்­களை உசுப்பி விடு­வ­தற்கும் அவர்­களை அர­சியலமைப்­புக்கு எதி­ராகத் திருப்பி விடு­வ­தற்கும் சதி செய்­யப்­படுவதாக அரச தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, புதிய அர­சியல­மைப்பு நாட்­டுக்கு மிகவும் அவ­சி­ய­மாகும், பெரும்­பான்மைச் சிங்­கள மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் ஆபத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் புதிய அரசியல­மைப்பு தயா­ரிக்­கப்­பட மாட்­டாது.


சிங்­கள மக்­களைப் பாது­காக்கும் வகை­யில்தான் அரசியலமைப்பு தயா­ரிக்­கப்­படும் என­அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

இன்னும் புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதில் அடங்கப் போகின்ற விட­யங்கள் பற்றி எதுவும் தெரி­யாமல் பொய்­யான தக­வல்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக, பௌத்த மக்­க­ளுக்கும் பௌத்த மதத்­துக்கும் நாட்­டுக்கும் ஆபத்து ஏற்­படும் வகை­யில்தான் அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது என்று சிலர் கூறித் திரி­கின்­றனர்.

ஜனா­தி­பதி ஒரு பௌத்தர். பிர­த­மரும் ஒரு பௌத்தர். இவர்கள் தங்­க­ளது பௌத்த மதத்தை அழிப்­ப­தற்கு முற்­ப­டு­வார்­களா என்று பௌத்த மக்கள் சிந்­தித்துப் பார்க்­க­வேண்டும்.

பௌத்த மதத்தை சீர­ழிப்­பதால் எமக்கு ஏற்­படப் போகும் நன்மை என்ன? ஆகவே, இது தொடர்பில் பௌத்த தேரர்­க­ளைக்­கூட பிழை­யாக வழி­ந­டத்­து­வ­தற்கே சிலர் முயற்சி செய்­கின்­றனர்.

பௌத்த மதத்­துக்கு இருக்கும் முதன்மை இடம் அப்­ப­டி­யேதான் இருக்கும். அதை மாற்­று­வது பற்றி எவரும் கூறவும் இல்லை. பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் ஆபத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட மாட்­டாது.

நாட்­டி­லுள்ள அணைத்து மக்­க­ளையும் பாது­காக்கும் வகை­யில்தான் அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­படும் என்­பதை அழுத்­த­மாகக் கூறிக்­கொள்­கிறேன். புதிய அர­ச­மைப்பு நாட்­டுக்கு மிகவும் அவ­சி­ய­மாகும். நாட்­டுக்கு நல்­லது செய்ய வேண்டும் என்ற நோக்­கி­லேயே புதிய அர­ச­மைப்பைக் கொண்டு வர­வுள்ளோம்.

அப்­ப­டிப்­பட்ட அர­ச­மைப்பைக் கொண்டு நாம் வீண் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வோமா என்று சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். குழப்­ப­வா­தி­களின் பொய்ப் பிர­சா­ரங்­களை மக்கள் நம்­பி­விடக் கூடாது.

குறிப்­பாக, மத விட­யத்தில் கை வைத்து தேரர்­களை உசுப்பி விடு­வ­தற்கும் அவர்களை அரசமைப்புக்கு எதிராகத் திருப்பி விடுவதற்கும் சதி செய்யப்படுகின்றது.

ஜனாதிபதி தேரர்களைச் சந்தித்து புதிய அரசமைப்பு பற்றி முழுமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

-Vidivelli -

மத விட­யங்­களில் கை வைத்து பிக்கு­களை உசுப்­பேற்ற சதி ! மத விட­யங்­களில் கை வைத்து பிக்கு­களை உசுப்­பேற்ற சதி ! Reviewed by Madawala News on 7/12/2017 10:27:00 AM Rating: 5