Ad Space avaiable

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அவலம் ! கண் திறக்குமா முஸ்லிம் சமூகம் ? 


இலங்கையில் உள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரிகளில் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்லூரியாகும்.

காலஞ்சென்ற தியாகச் செம்மல் Sir Rasik fareed அவர்களால் முஸ்லிம் சமுதாயத்தின் நலன் கருதி சமூகத்திற்காக தியாகம் செய்யப்பட்ட இக்கல்லூரியின் இன்றைய நிலை,நம் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது.

காலத்திற்கு காலம் இங்கு அதிபர்களாக வரக்கூடிய ஒவ்வெரு வரும் இப்பாடசாலையைவைவத்தே கோடீஸ்வர்களா மாறிய வரலாறுகள் ஏராளம். ஆனால் இதற்கு விலை போது நம் சமுதாயம் மகளிர் எதிர்காலம் எனபதை இன்னும் நம் சமுதாயம் சிந்திக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. முஸ்லிம்களின் மூத்த அரசியல் தலைவர் எனப்படும் சில அரசியல் வாதிகளாலும் இளம் அரசியல் வாதிகள் என அழைக்கப்படும் சமுதாயத்திற்கு பிரயோசனமற்ற அரசியல் வாதிகளாலும் தங்களுடைய சுயநலத்திற்காக தொடர்ந்தும் இக்கல்லூரி பயன்படுத்த படுவதை தொடர்ந்தும் அனுமதிப்பதா?

விழாக்களுக்கு தங்களை அழைப்பதற்காகவும் தாங்களும் மாலை போடடுவதற்காவும் மாத்திரம் முஸ்லிம் அரசியல் தலைவர்களால் மட்டுப்படுத்தப்பட்ட இக்கல்லூரியின் இன்றைய நிலை நினைத்து நாம் கண்ணீர் வடிக்க வேண்டும்.

பதவியில் இருந்த அதிபர் ஓய்வில் போய் சுமார் ஒன்றரை வருடம் ஓடிவிட்டது.இக்கல்லூரியிற்கு ஒரு அதிபரை நியமிக்க ஒரு அரசியல் வாதியும் முன்வரவில்லை.பல நாட்கள் பல இரவுகள் ஒரு மணி இரண்டு மணி என அரசியல் வாதிகளின் வீட்டில் காத்தும் பயனில்லை.இவர்கள் சொல்லும்

நொண்டிக்காரணம் கேவலம்.முஸ்லிம்களின் கல்விக்காக பாடுபடப்போகிறேன் என தேர்தல் காலங்களில் வானம் பிளக்க கத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றியோடு மறைந்து விட்டனர்.

இலங்கையில் உள்ள ஏனைய சமுகங்களின் முதன்மை பாடசாலைகளும் சிறந்த அதிபர்கலோடும் அரசியல் கண்காணிப்புக்கலோடும் எதிர்கால சவால்களை சந்திக்க வீறுநடை போடும்போது நமது பாடசாலைக்கு மட்டும் இவ்வாறு இழி நிலை.

தற்போது நடப்பது என்ன ! (0/L ) மாணவிகளுக்கு பரீட்ச்சை இல்லை ======================

பாடசாலைக்கு அதிபர் இல்லை.வேலை பார்பவர் தகுதியற்ற சிங்களம் கூட தெரியாதவர்.கடந்த மே,ஜுன் மாதங்களில் அனைத்து பாடசாலைக்கும் மாகாண கல்வி வலயத்தால் பரீட்ச்சைக்கு தோற்றும் மாணவிகளின் விபரத்தையம் தேவையான வினாத்தாள்கள் விபரத்தையும் தரும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தற்காலிக அதிபரின் கவனையீனமும் அவருக்கு சிங்களம் தெரியாத காரணத்தாலும் குறித்த கடிதத்திற்கு பதில் அனுப்பப்படவில்லை. மாணவிகளுக்கு பரீட்சை வினாத்தால் இல்லை. ஒவ்வெரு நாலும் பக்கத்தில் உள்ள st. பீட்டர் college இருந்து ஒவ்வெரு வினாத்தாள் வாங்கப்பட்டு Photo coppy பண்ணப்பட்டு மாணவிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

மூன்று மணிநேர paper ஒரு மணிநேரம் கழித்து மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. சில பாடங்கள் மொத்தமாகவே நடைபெறவில்லை.St. பீட்டர் college இல் I T தமில் மூலம் இல்லாததால் Muslim Ladies மாணவிகளுக்கு IT நடைபெறவில்லை. இதை நாம் மாகாண கல்வி வலய Director அவர்களிடம் கேட்க அவர் சொன்ன பதில் "நாம் விபரத்திரட்டு அனுப்பியபோது பதில் வரவில்லை அதனால் அவர்களுக்கு நாம் Paper அச்சிடவில்லை"

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இதில் இம்முறை O/L எழுதும் மாணவிகளும் இதில் அடங்குவர் இவர்களுக்கும் பாடங்கள் இல்லை.

இதுதான் நம் முஸ்லிம் சமுதாயத்தின் முதன்மை பாடசாலையின் இன்றைய நிலை.

கண் திறக்குமா நம் சமூகம் ?

-அபு ஹிஸ்மத்-

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அவலம் ! கண் திறக்குமா முஸ்லிம் சமூகம் ?  பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அவலம் ! கண் திறக்குமா முஸ்லிம் சமூகம் ?  Reviewed by Madawala News on 7/20/2017 03:12:00 PM Rating: 5