Ad Space avaiable

மரிக்காரின் கேள்விகளுக்கு பிரதமர் நாளை பதில் அளிக்கவேண்டும் ..


கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அலுத்கமை கலவரம் மற்றும் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடந்த மாதம் பாரளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தில் இது விடயமாக எஸ் எம் மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அவர் அமெரிக்கா சென்றிருந்ததால் அதற்க்கு பதில் வழங்கவில்லை.


இந்த நிலையில் இது தொடர்பில் நாளை அவர் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மரிக்காரின் கேள்விகளுக்கு பிரதமர் நாளை பதில் அளிக்கவேண்டும் .. மரிக்காரின் கேள்விகளுக்கு பிரதமர் நாளை பதில் அளிக்கவேண்டும் .. Reviewed by Madawala News on 7/04/2017 10:28:00 PM Rating: 5