Kidny

Kidny

ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை ஊக்குவிக்கிறது ; ஜே வி பி குற்றச்சாட்டு ..


ஐக்­கிய தேசியக் கட்­சியின் இன­வா­தமும் பழி­வாங்கல் செயற்­பா­டுமே கறுப்பு ஜூலை க்கு கார­ண­மாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்சி செய்து வரு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை பலப்­ப­டுத்தி இன­வா­தத்­திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது எனவும் அக்­கட்சி தெரி­வித்­தது.


மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சோச­லிஷ இளைஞர் அமைப்பு நேற்றுமுன்தினம் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் அவ்­வ­மைப்பின் இணைப்­பாளர் எரங்க குண­சே­கர தெரி­விக்­கையில், 

இலங்­கையில் கறை­ப­டிந்த சம்பவமே 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவம். ஒரு மாத­மாகும். நாட்டில் இடம்­பெற்ற இன­வாத அடைக்­கு­முறை இலங்­கை­யர்­க­ளுக்கு மட்டும் அல்­லாது சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் இலங்கை மீதான அவப்­பெ­யரை உரு­வாக்­கிய சம்பவமாகும். யாழ்ப்­பா­ணத்தில் குண்டு வெடிப்பில் 13 இரா­ணுவ வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். அதன் விளைவு அடுத்த மூன்று தினங்­களில் தமிழ், சிங்­கள மக்­களின் உடல்கள் எரிக்­கப்­பட்­டன. கடைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன.

சிறைச்­சா­லைக்குள் இருந்த தமிழ் கைதிகள் மோச­மான முறையில் கொலை­செய்­யப்­பட்­டனர். அப்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வர்கள் இந்த அழிப்­புக்கு கார­ண­மாக அமைந்­தனர். தமிழ் சிங்­கள முஸ்லிம் இன­வாத நட­வ­டிக்­கைகள் பரப்­பிய அப்­போ­தைய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களின் விளை­வுகள் இறு­தியில் நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒன்று உரு­வா­கவும், நாட்டில் சிங்­கள தமிழ் இன­வாத அர­சியல் ஒன்று உரு­வா­கவும் கார­ண­மாக அமைந்­தன. புலிகள் என்ற பல­மான அமைப்பு ஒன்று உரு­வா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியே கார­ண­மாகும். 

நாட்டில் சிங்­கள இன­வா­தத்தை ஐக்­கிய தேசியக் கட்சி பரப்­பிய அதே நிலையில் தமிழ் பயங்­க­ர­வ­ா திகள், அர­சியல்வாதிகள் தமிழ் இன­வா­தத்தை பரப்­பினர். இவற்றின் இறுதி விளை­வாக ஆயிரக் கணக்­கான இளை­ஞர்கள் கொல்­லப்­பட்­டனர். நாட்டில் பாரிய சேதங்கள் ஏற்­பட்­டன அநா­தை­க­ளாக பலர் மாற்­றப்­பட்­டனர். இப்­போது வரையில் அதன் தாக்கம் நாட்டில் உள்­ளது. தேசிய நல்­லி­ணக்கத்தை யுத்­தத்­தினால் உரு­வாக்­கி­விட முடி­யாது. 

யுத்­தத்­திற்கு அப்பால் சென்று ஒரு பல­மான வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும். அதற்­கான சந்­தர்ப்­பத்தை உரு­வாக்க இப்­போது நல்ல வாய்ப்­புகள் உள்­ளன. ஆனால் அன்று ஆட்­சியில் இருந்த ஐக்­கிய தேசியக் கட்­சிய எவ்­வாறு இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து சென்­றதோ அதேபோல் இன்றும் அதே­போன்­ற­தொரு நிலை­மையை நாட்டில் உரு­வாக்கி வரு­கின்­றது. மீண்டு நாட்டில் இன­வா­தத்தை பலப்­ப­டுத்தி அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. 

மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை உரு­வாக்க, மோதல்­களை உரு­வாக்க முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களும் இன்று ஆட்சி செய்­ப­வர்­களும் முயற்­சித்து வரு­கின்­றனர். தமது அர­சியல் நோக்­கத்­திற்­காக மீண்டும் இவர்கள் இன­வா­தத்தை கையில் எடுக்­கப்­பார்க்­கின்­றனர். கடந்த ஆட்­சியில் அர­சாங்­கத்தின் மூலம் வளர்த்­து­வி­டப்­பட்ட சில சேனாக்கள் இருந்­தனர். இவர்கள் மூல­மாக நாட்டில் மிகவும் மோச­மான வகையில் இன­வாதம் பரப்­பப்­பட்டு வந்­தது. இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததும் நிலை­மைகள் மாறும் என கூறப்­பட்­டது. ஆனால் இந்த அர­சாங்­கமும் அதே விளை­யாட்டை விளை­யாட ஆரம்­பித்­துள்­ளது. 

நாட்டில் இன­வாதம் செய்­த­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக பிணை கிடைக்­கின்­றது. ஆனால் சைட்டம் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக போரா­டிய எமது சகோ­த­ரர்கள் இன்றும் சிறை­களில் அடைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். 

கடந்த காலத்தில் கடைகள் எரிக்­கப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­பட்­டன. இந்த செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இது­வ­ரையில் எந்­த­வித தீர்வும் பெற்றுக் கொடுக்­க­வில்லை. இன­வா­தத்தை தடுக்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும். 

ஆனால் அர­சாங்கம் இந்த விட­யங்­களில் மௌ னம் காக்­கின்­றது. அதேபோல் இந்த அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை கொடுக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. உமா ஓயா பிரச்­சினை, டெங்கு நோய் பிரச்­சினை, சைட்டம் பிரச்­சினை, தொழி­லாளர், விவ­சா­யிகள் பிரச்­சினை என பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனால் இவற்றில் தீர்வை பெற்றுக் கொடுக்­காது சுய­நல அர­சியல் மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்றது. 


ஆகவே இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் மத்தியில் இனவாதம் நீக்கப்பட்டு ஐக்கியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கியமாக நாம் முன்னோக்கி செல்ல முடியாது. தமிழர்களோ, சிங்களவர்களோ அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலைமைக்கு வரவேண்டும். ஆகவே மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.

ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை ஊக்குவிக்கிறது ; ஜே வி பி குற்றச்சாட்டு .. ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை ஊக்குவிக்கிறது ; ஜே வி பி குற்றச்சாட்டு .. Reviewed by Madawala News on 7/21/2017 10:20:00 AM Rating: 5