Yahya

நல்லாட்சியை விரும்பிய முஸ்லிம்கள் கரிவேப்பிலையா? 


ஜே.ஆர்.ஜெவர்த்தன அவர்களின் தலைமைக்கு பிறகு உறுதியான அரசியல் செய்ய முடியாமல் ஐக்கிய தேசிய கட்சி தவித்த போது அதற்கு ஊட்டச் சத்து வழங்க வந்த மைத்திரிபால சிரிசேனா அவர்களை நம்பிய மக்கள் யானை சின்னத்துக்கு வாக்களித்தனரே தவிற ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்ல என்பதை மக்கள் இப்போது சந்திக்கு சந்தி பேசிக் கொள்கின்றனர். 


கடந்த ஆட்சி காலங்களில் நாட்டில் பயங்கரவாத பிரச்சினை இருந்தது அதனால் நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதி மக்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்த செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால் ஆயுத கொள்வனவு செய்யபட்ட போதும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.


அத்தோடு நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் யுத்தம் என்பது பல வருடம் நடைபெற்ற போதும் யுத்த காலத்தில் அதிக காலத்தை ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சியால் யுத்தத்தை வெற்றி பெற முடியாத நிலையில் சிறிலாங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர் நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் கொண்ட பாசத்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க மிகவும் பிரயத்தனம் மேற் கொண்டார் அதில் வெற்றியும் பெற்றார் அதனால் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம் என்பதை எவரும் மறுக்க முடியாது. 


மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சி என்பது ஒரு வேடிக்கையாகவே இருந்தது யுத்தம் ஒரு பக்கம் அபிவிருத்தி ஒரு பக்கம் தொழில் வாய்ப்பு ஒரு பக்கம் என்ற நிலையில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த போதும் ஆயுத குழுவுக்கு மட்டுமே பயந்து வாழ்ந்தார்கள் வேறு இனத்துக்கு பயந்து வாழ வில்லை ஆனால் இன்று நடைபெறும் நல்லாச்சியால் மக்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடைபெறவில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.


சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள எழுச்சி பெற வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்த்துக்கு கஸ்டம் அறிந்த ஒரு தமிழ் பேசும் மகனான றிசாத் பதீயூத்தீன் அவர்களை நியமித்து யுத்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீள்குடியேற்ற உத்தரவிட்டு அதற்கான நிதியுதவிகளையும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் செய்தார்.


அதன்படி அமைச்சர் றிசாத் இரவு பகலாக தான் வாழ்ந்த அகதி வாழ்வு எந்த சமுதாயமும் வாழக்கூடாது என்ற மனவேதனையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சம்மந்தமான குழுவினரின் பாராட்டும் மக்கள் சேவனாக திகழ்ந்தார். 


யுத்த காலத்தில் வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் தங்களது சொத்துக்களை இழந்து அகதிகளாக வேறு மாவட்டத்துக்கு சென்ற போது மக்களுக்கு உதவியாக மக்களுடன் அழுது கொண்டு அகதியாக சென்றவர் தான் அமைச்சர் றிசாத் அவர்கள் அதனால்தான் இன்று அகதிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் அவரின் முயற்சிக்கு நல்லாச்சி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவது குறைவாகவே காணப்படுகின்றன.


அகதிகளாக தமிழ் சமுதாயம் அதிகமாக இருந்த போது அந்த மக்களின் சகவாழ்வில் தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ளாத அக்கரையை அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்டார் அதை இன்றும் தமிழ் மக்கள் மறக்காமல் நினைவு கூர்ந்து வருகின்றனர் அத்தோடு இன்று தமிழ் மக்கள் அமைச்சர் றிசாத் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.


நடைபெறும் நல்லாச்சியில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சால் வடக்கில் மீண்டும் தனது பணிகளை செய்ய விரும்பிய போதும் இனவாதிகளால் தடுக்கப்பட்டேன் என்று இன்றும் கவலையடைகின்றார் அமைச்சர் றிசாத் அவர்கள் அமைச்சர் இன்றும் தனது சொந்த முயற்சியால் வட மாகாணத்தில் பல இன மத பேதமின்றி அபிவிருத்தியை செய்து வருகின்றார் அதே போன்று நல்லாச்சி அரசாங்கம் பல தடைகளை செய்து வருவது மிகவும் வேதனைக்குரிய விடயம். 


அதாவது யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தனது சொந்த இடங்களிலும் குடியேறலாம் அவர்களது நிலங்கள் அவர்களுக்கு உரியது என்று வில்பத்து பிரதேசங்களை உரியவர்கள் பெறுவதற்கு ஏற்ப அரச வர்த்தகமாணியில் திருத்தம் செய்து தனது இனவத பேதம் அற்ற செயலை மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்தினார் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் நல்லாச்சி அரசாங்கம் வில்பத்து பிரதேசங்களில் உரிய மக்கள் குடியேற முடியாதவாறு திருத்தம்களை அரச வர்த்தகமாணியில் செய்து தடையை ஏற்படுத்தியுள்ளது இவைகளை பார்க்கும் போது நல்லாச்சியை நம்பி கெட்டவர்கள் சிறுபான்மை மக்கள் இன்று மஹிந்த ராஜபக்ச அவர்களை நினைவு கூறுவதில் தப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். 


அதுமட்டுமல் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசியல் காலத்தில் இனவாத பேச்சுக்கள் செயல்பாடுகள் அதிகமாக இருக்க வில்லை அதனால் அவாரோடு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையிழக்க இனவாத சக்திகள் மேற்கொண்ட ஊடுறுவல் கொண்டு வந்த நல்லாச்சியின் காலத்தில் சிறுபான்மை சமுதாயம் மிகவும் மனம்நோந்த நிலையில் காணப்படுகின்றனர்( அன்மைய சம்பவங்கள் ) அதை நிவர்த்தி செய்யும் கடமை தன்னை நம்பிய ஜனாதிபதி அவர்களிடமே உள்ளது தவிர ரனிலிடம் இல்லை என்று தான் கூற வேண்டும் அதை ஜனாதிபதியும் தற்போது புரிந்து இருப்பார் என நினைக்கிறேன் அதனால்தான் தான் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்க முடியாத உரையை நிகழ்த்தியுள்ளார் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. 


பல வருடமாக ஆட்சியை பிடிக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சி நல்லாச்சி என்ற போர்வையில் ஆட்சி பிடித்தாலும் சிறுபான்மை மக்களை கவரும் வகையில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.


சிறுபான்மை மக்களில் தமிழ் சமுதாயம் பதவி பணத்துக்கு சோரம் போகாதவர்கள் அவர்கள் தன் இனத்துக்காகவே இன்று ஒரு(வீடு) சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றனர் அந்த நிலமை முஸ்லிம் சமுதாயத்தில் இல்லை அவர்கள் ஆயிரம் கட்சி அமைத்து பதவி பணத்துக்கு சோரம் போகின்றவர்கள் அதில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது அதன் தலைவரோ அரசியல் வியாபாரியாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றார் இப்படியான அரசியல் வியாபாரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவே பெரும்பான்மை கட்சிகளின் கூட்டாச்சியா? நல்லாச்சி என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களை அரவனைப்பதற்காகவே பாராளுமன்றத்தில் அவர்களை இன்று அரவனைத்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதி தேர்தல் முடிந்தால் நல்லாச்சி என்று மீண்டும் வந்தால் கருவேப்பலையாக சிறுபான்மை மக்கள் தூக்கி வீசப்படுவாகள் இதில் முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் அரசியல்வாதிகளை நம்பக்கூடாது.

கடந்த ஒரிரு மாதம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பல சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பிரதமர் பார்த்து கொள்ளவேண்டும் அப்படி செய்ய தவறும்பட்சத்தில் எதிர்கால அரசியலில் யானை பூனையாகி அரசியல் களத்தில் கை சின்னமும் வெண்தாமரை சின்னமும் மக்களிடையே பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெமீல் அகமட்

நல்லாட்சியை விரும்பிய முஸ்லிம்கள் கரிவேப்பிலையா?  நல்லாட்சியை விரும்பிய முஸ்லிம்கள் கரிவேப்பிலையா?  Reviewed by Madawala News on 7/07/2017 04:15:00 PM Rating: 5