Kidny

Kidny

அரசியல் யாப்பிலும் முஸ்லிம்கள் பொடுபோக்கு  !


- ஏ.ஜே.எம்.நிழாம்  -

உத்­தேச  புதிய யாப்பு பற்றி  நம்மில் எத்­தனை  முஸ்­லிம்­க­ளுக்கு ஆய்வும் அக்­க­றையும் ஆர்­வமும்  இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வில்லை.

சிங்­க­ள­வரும் தமி­ழரும் இதில் தீவிரம் காட்­டு­கையில் முஸ்­லிம்­களின் ஈடு­பாடு   மந்­த­மாக இருப்­ப­தா­கவே நினைக்­கிறேன். மொத்­தத்தில்  சமூக நல  விட­யத்தில் ஆங்­கி­லேயர்  காலத்தில்  வாழ்ந்த முஸ்­லிம்­களை விடவும் யாப்பு விட­யத்தில் எங்களது  செயற்­பாடு  குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­க­தாக இல்லை என்றே கூற வேண்டும். 


குறிப்­பாக 1931 ஆம் ஆண்டின் டொனமூர்  யாப்பு  காலத்­திலும் 1946 ஆம் ஆண்டின் சோல்­பரி யாப்பின் காலத்­திலும் சமூ­கத்­துக்­காக முஸ்­லிம்கள் பாடு பட்டு முஸ்­லிம்­களின்  விட­யங்­க­ளையும் உள்­நு­ழைத்­தது பற்றி  இங்கு கூறி­யாக வேண்டும். 1989 ஆம் ஆண்டு முதல்  1946 ஆம் ஆண்டு  வரை  வாழ்ந்த  முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு யாப்பு  விட­யங்­களில் ஆழ்ந்த  புலமை  இருந்­தி­ருக்­கின்­றது.


சித்­தி­லெப்பை, ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், எம்.சி.அப்துர் ரஹ்மான், ஹொன­ரபல் அப்துல் ரஹ்மான், சேர் ராசிக் பரீத், டி.பி. ஜாயா ஆகி­யோரின் பங்­க­ளிப்பு  இதில் அபா­ர­மா­ன­தாகும் எனினும் 1972 ஆம், 1978  ஆம் ஆண்டு யாப்­பு­களின் போது  சமூ­கத்­த­னித்­து­வத்­தையும் அடிப்­படை உரி­மை­க­ளையும் பேரி­ன­வா­தத்­திடம் தாரை வார்த்து விட்­டார்கள் என்­ப­தையும் கூறித்தான் ஆக  வேண்டும்.  


தற்­போது தனித்­தனி  தனித்­துவ கட்­சி­க­ளிலும்  தேசிய கட்­சி­க­ளிலும்  அரசு சார்­பாக 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்­கி­றார்கள்.  இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கெனப் புதி­தாக ஒரு யாப்பை பல்­லின  வடிவில் உட­ன­டி­யாக  இயற்­று­மாறு ஐ.நா. இலங்­கை­யிடம்  கூறி­யி­ருக்­கையில்  சிங்­க­ள­வரும்  தமி­ழரும்  இதில் அதிக முனைப்பு காட்­டு­கையில்  உடனே இவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரி­யுமா முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­களும் புதிய யாப்பில் இடம் பெறச்  செய்­வ­தற்கு  தீவிரம் காட்ட வேண்டும். 


ஆங்­கி­லேயர் எல்லா இனத்­தி­ன­ரையும்  சுயா­தீ­ன­மாகச் செயற்­பட அனு­ம­தித்­தி­ருந்­தனர். கட்­சி­வாத அர­சியல் அதை  உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தா­த­தால்தான் பேரினப் போலி தேசிய கட்­சி­களின்  முஸ்லிம் தலை­மைகள் பேரின யாப்­பு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு  வழங்­கி­விட்­டன. தற்­போது  தனித்­துவக் கட்­சி­களின் முஸ்லிம் எம்.பி.க்களும் போலி தேசியக் கட்­சி­களின் முஸ்லிம்  எம்.பி.க்களும்   பேரி­ன­வாதப் பிடி­யி­லேயே இருக்­கின்­றார்கள்.


எனினும்  ஞான­சாரர் விட­யத்தில்  இணைந்­த­துபோல் இதிலும்  இணைந்து  செயற்­பட வேண்டும்.  புதிய யாப்பில் இலங்கை முஸ்­லிம்­களின் விட­ய­மாக கிழக்கு  முஸ்லிம் பகு­தி­க­ளையே முன்­னி­லைப்­ப­டுத்த வேண்டும். கிழக்கில் முஸ்லிம் சனப்­ப­ரம்பல் அதிகம் என்­ப­தாலும் நாடு முழுக்க  சிதறி வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­புத்­தளம் என்­ப­துமே இதற்குக் கார­ண­மாகும். 1983  ஆம் ஆண்டு கொழும்­பி­லி­ருந்து தமி­ழரை  சிங்­க­ளவர்  விரட்டும் போது யாழ்ப்­பாணத்துக்கு போ எனக் கூறி­ய­தையும் 1991 ஆம் ஆண்டு வடக்­கி­லி­ருந்து  தமிழர்  முஸ்­லிம்­களை விரட்டும் போது கிழக்­குக்­குப்போ எனக் கூறி­ய­தையும் இங்கு ஞாப­க­மூட்ட விழை­கிறேன். 


பாது­காப்­புத்­து­றை­யிலும் உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்­திலும் நீதித்­து­றை­யிலும் தொகுதி நிர்­ணயக் குழு­விலும் சிங்­க­ளவர் 100  வீத­மாக  இருக்­கையில் தான் அவர்­க­ளுக்கு  மத்­தியில் முஸ்­லிம்கள், சித­ற­லாக சிறு சிறு  தொகை­யி­ன­ராக  வாழ்­கி­றார்கள். சிறு­பான்மைக் காப்­பீ­டான  29 ஆம் ஷரத்தை  நீக்கி சிங்­க­ளவர்  பாது­காப்பு  உத்­த­ர­வா­தத்தை  யாப்பில் வழங்­கிய போதும் அண்­மையில் ஞான­சா­ரரின் அட்­டூ­ழி­யங்­களின் போது அது கிடைக்­க­வில்லை.

சிறு­பான்மைக் காப்­பீட்டுச்  சட்­ட­மான 29 ஆம் ஷரத்தும்  கூட  அன்று அலட்­சியம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. கிழக்கில்  திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றமும் மலை­ய­கத்தில் தமிழ் தோட்டத் தொழி­லா­ளரின்  பிரஜா உரிமை நீக்­கமும் இடம்­பெற்­றன. 

எனவே கிழக்கைச் சாராத முஸ்லிம் எம்.பி.க்களும் கிழக்கை மையப்­ப­டுத்­தியே யாப்பு  விட­யத்தில் இயங்க வேண்டும்.  ஐ.நா. கூறி­ய­படி சிறு­பான்­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய யாப்­பொன்றை இயற்றி அமுல்­ப­டுத்­து­வ­தாக  வாக்­கு­றுதி வழங்­கியே 2015 ஆம் ஆண்டு  ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறு­பான்­மை­களின் வாக்­கு­களை அதி­க­மாகப் பெற்று  வெற்­றி­ய­டைந்தார். எனவே இவர், உயர்­ பிக்குபீடங்கள் நான்­கி­னதும்  சொல்லைக்  கேட்டு  சிறு­பான்­மை­க­ளுக்கு வழங்­கிய  வாக்­கு­று­தியை மீறு­வது  வர­லாற்றுத் தவ­றா­கி­விடும். சிறு­பான்­மைகள் இவ­ருக்கு 100 வீதம் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். 


அண்­மையில் மகிந்த கூறி­யி­ருந்த கருத்­து­க­ளையே இந்த நான்கு பௌத்த பீடா­தி­ப­தி­களும் முன்­வைக்­கி­றார்கள். ஓர் அர­சியல் நிகழ்ச்சி நிர­லையே இது வெளிப்­ப­டுத்­து­கி­றதா? மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மி­ருந்து சிறு­பான்­மைகள் அக­லவும்  ஐ.நா.வில் இறு­கவும் செய்­தி­ருக்கும் தந்­தி­ரமா? மகிந்த  வென்­றி­ருந்தால் மைத்­தி­ரியின் நிலை  என்­ன­வா­கி­யி­ருக்கும் அந்த அளவில் மைத்­தி­ரிக்கு அதிக அளவில் வாக்­கு­களை அளித்த சிறு­பான்­மை­க­ளுக்கு அவர் கட­மைப்­பட்­டி­ருக்­கிறார். அந்த  தேர்­தலின் போது அந்த நான்கு பௌத்த பீடா­தி­ப­தி­களும்  இவரை ஆத­ரித்­த­தாகக் கூற முடி­யாது.  

தற்­போது பல கட்­சி­க­ளையும் சேர்ந்த 21 முஸ்லிம் எம்.பி.க்களும் அரச சார்­பா­கவே இருக்­கின்­றனர். அவர்கள் ஒரே அணி­யாக  ஞான­சாரர் விட­ய­மாக  ஜனாதிபதியை சந்திக்க  அனு­மதி  கிடைக்­க­வில்லை. 

கிழக்கில் சிங்­க­ள­வரின் திட்­ட­மிட்ட குடி­யேற்­றத்தைத் தடுக்­கவே கிழக்கு தமிழர் வடக்­கோடு கிழக்கை சேர்த்­து­வி­டு­மாறு கோரு­கி­றார்கள். அதற்கு இசை­வா­கவே காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கோரு­கி­றார்கள். இவை பிரி­வி­னையோ தனி­நாடோ அல்ல ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளையும் விட இணைந்த வடக்கு, கிழக்கின்  விஸ்­தீ­ரணம் அதிகம்  என்­பது  மட்­டு­மே­யாகும். மத்­திய  அரசின்  காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுக்குப் புறம்­பாக மத்­திய அர­சுக்­குட்­பட்ட மாகாண ரீதி­யி­லான  காணி அதி­காரப் பிரிவும்  பொலிஸ்  அதி­காரப் பிரிவும்  இதற்கு  இருக்கும். யாப்பு மூலம் இதற்குக் காப்­பீடு வேண்டும். 

திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்றம் முஸ்­லிம்­க­ளையும் பாதிப்­பதால் தனித்து நின்று அதைத்­த­டுக்க முடி­யாது.  எனவே  கிழக்கை வடக்கு இணைப்­ப­தற்­குப்­ப­க­ர­மாக கிழக்கில் முஸ்லிம் அதி­கார அல­கையும் கரை­யோர மாவட்­டத்­தையும் கோரலாம். ஆக தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் கொடுத்து எடுப்­பதன் மூலமே கிழக்கில் இரு  சாரா­ரி­னதும் இருப்பு, வாழ்­வா­தா­ரங்­களும்  வர­லாறும் மொழியும்  கலையும் கலா­சா­ரமும்  பாது­காப்பும் நிலைக்கும். தொடர்ந்தும் இவர்கள் முரண்­பட்டு  நிற்­பார்­க­ளானால்  கிழக்கின் பெரும்­பான்­மையை இழந்து விடு­வார்கள்.  முஸ்லிம் அதி­கார  அல­குக்கும் தனி­யாக காணி மற்றும்  பொலிஸ் அதி­கா­ரங்கள் வேண்டும்.  

சிங்­க­ள­வர்­க­ளுக்கு  18 மாவட்­டங்­களும்  தமி­ழர்­க­ளுக்கு 7 மாவட்­டங்­களும் இருப்­பதால்  முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய  கரை­யோர மாவட்­டத்­தையும் வழங்க வேண்டும் என்­பதே  நியா­ய­மாகும்.  தற்­போது புதிய யாப்­புக்கு முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. மல்­வத்த, அஸ்­கி­ரிய ராமன்ய, அம­ர­புர ஆகிய பௌத்த பீடங்கள் நான்கும் புதிய யாப்பு இயற்­றப்­ப­டு­வதை எதிர்க்கக் காரணம் ஒற்­றை­யாட்­சியும் பௌத்த மத, பௌத்த சாசன சிங்­க­ள­மொழி  முன்­னு­ரி­மை­களும் நிறை­வேற்று  அதி­கா­ரமும் சுய நிர்­ணய உரி­மையும் இறை­மையும் பௌத்­தர்­க­ளிடம் இருக்­க­வேண்டும் என்­ப­தற்­கே­யாகும். 

ஒற்­றை­யாட்­சியும் பௌத்த மத பௌத்த சாசன சிங்­கள மொழி முன்­னு­ரி­மை­களும் நிறை­வேற்று அதி­கா­ரமும் பௌத்­தர்­க­ளி­டமே இருக்­கட்டும் சுய­நிர்­ணய உரி­மையும்  இறை­மையும் இருக்கட்டும். இதை ஐ.நா.விடம் முன்வைக்க  வேண்டியதுதான் சர்வதேச  விதிகளின்படி  வடக்கு, கிழக்கு  தமிழரின்  சுய நிர்ணய தனி இறைமைக்கோரிக்கை ஐ.நா.வால்  அங்கீகரிக்கப்பட்டு விடலாம்.

இதனாலேயே பிரிவினையும்  தனிநாடும்  உருவாகும்.  ஆக பிரபாகரனால் முடியாமற்போனதை நான்கு நிக்காயாக்களும் செய்ய வழிகாட்டி விடுவார்கள். கற்கால அனகாரிகவின்  வழியை  விட்டு விட்டு  தற்கால உலக  நடைமுறைக்கு  இவர்கள்  வரவேண்டும். 

பல்லின நாட்டில் தனித்தனி மத,மொழி, கலை, கலாசார, வரலாறு, பிரதேச  வாழ்வாதார அடிப்படைகளை ஒருங்கே கொண்ட ஒவ்வொரு இனத்துக்கும் சுய நிர்ணய  மற்றும்  தனி இறைமை உரிமைகள்  உண்டு என சர்வதேசம் வரையறுத்திருக்கிறது. எனவே புதிய யாப்பு அதையே பிரதிபலிக்க வேண்டும். 

அரசியல் யாப்பிலும் முஸ்லிம்கள் பொடுபோக்கு  ! அரசியல் யாப்பிலும் முஸ்லிம்கள் பொடுபோக்கு  ! Reviewed by Madawala News on 7/17/2017 03:11:00 PM Rating: 5