Ad Space avaiable

வீண் விரயமாக்கப்படும் மக்கள் பணம் ! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ..


ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் குத்தகைக் காலம் நிறைவடைந்த A320 எயார் பஸ் காரணமாக நாளாந்தம் நாட்டிற்கு 12,000 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.


இந்த விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக இந்தோனேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.இந்த விமானத்தை மீள ஒப்படைக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் 12,000 அமெரிக்க டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.


இலங்கை நாணயப் பெறுமதியில் அது 1.86 மில்லியன் ரூபாவாகும்.இதுவரை தாமதமான 64 நாட்களுக்காக 7,68,000 அமெரிக்க டொலர்களை அதாவது 119 மில்லியன் ரூபாவை செலுத்த நேரிட்டுள்ளது.


ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் இதற்கு மேலதிகமாக கடந்த வருடத்தில் 14.1 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ளது.


2010 ஆம் ஆண்டிலும் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


வீண் விரயமாக்கப்படும் மக்கள் பணம் ! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை .. வீண் விரயமாக்கப்படும் மக்கள் பணம் ! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை .. Reviewed by Madawala News on 7/11/2017 11:46:00 PM Rating: 5