Ad Space avaiable

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விரைவில் வெளியேறுவோம் ; இன்னுமொரு பிரதி அமைச்சர் சிகப்பு சமிச்சை ..


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரில் 18 பேர் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ள நிலையில் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவும் இந்த விடயத்தை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.


தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் .


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுன் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகின்றது. இதனால், கூட்டணியிலிருந்து விலக நேரிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


எதிர்வரும் காலங்களில் சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செல்வதில் பயனில்லை என தாங்கள் ஜனாதிபதிக்கு கூறவுள்ளதாக கூறிய அவர் தான் இது விடயமாக தனி தீர்மானம் எடுக்கவும் பின்நிற்க போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விரைவில் வெளியேறுவோம் ; இன்னுமொரு பிரதி அமைச்சர் சிகப்பு சமிச்சை .. கூட்டு அரசாங்கத்தில் இருந்து விரைவில் வெளியேறுவோம் ; இன்னுமொரு பிரதி அமைச்சர் சிகப்பு சமிச்சை .. Reviewed by Madawala News on 7/02/2017 10:33:00 PM Rating: 5