Ad Space Available here

அமெரிக்காவின் இரட்டை வேடம்


Muja ashraff 

எனவே தான் தாலிபான் ஆட்சிக்கு வந்தவுடன் காண்டகாரைச் சுற்றிலுமே கஞ்சா உற்பத்தி 50% அதிகரித்த போதும், பெண்கள் மீதும் மக்கள் மீதும் கொடூரமான அடக்குமுறை ஊடகங்களால் ஏவப்பட்ட போதும் அமெரிக்கா அதை கண்டிக்கவில்லை.


ஐ.நா. மதிப்பீட்டின்படி உலக போதை மருந்து வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 200 பில்லியன் டாலர் ஆப்கான் மற்றும் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. 1980 முதல் சி.ஐ.ஏ ஒருங்கிணைத்து நடத்தும் இந்த போதை மருந்துக் கடத்தலை அமெரிக்க அரசு கண்டு கொள்ளாததில் வியப்பேதுமில்லை.


ஆனால் வியப்புக்குரிய வேறொரு நாடகம் தொடங்கியது. 1996 மே மாதம் சூடானிலிருந்து ஆப்கானிஸ்தானில் குடியேறிய பின்லாடன், போராட்ட பயிற்சிப் பள்ளிகளை அமைத்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப் போர் தொடுக்குமாறு உலக முஸ்லீம்களுக்கு அறைகூவல் விட்டார். 1996 ஆகஸ்டில் இந்த பேட்டி வெளியானது.


ஆனால் 1996 நவம்பரில் நடைபெற்ற ஐ.நா. மன்றத்தின் கூட்டமொன்றில் “தாலிபானைத் தனிமைப்படுத்துவது ஆப்கானுக்கும் நல்லதல்ல, நம் யாருக்கும் நல்லதல்ல” என்று கூறி தாலிபானை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார் தெற்காசியாவுக்கான அமெரிக்க அரசின் துணைச் செயலர் ராபின் ரபேல்.


1997 மே மாதம் மசார்-ஏ-ஷெரிப் நகரின் மீது படையெடுத்த தாலிபான், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஷியா முசுலீம்களைக் கொன்று குவித்தது. பதினோரு ஈரானிய அதிகாரிகளையும், ஒரு ஈரானியப் பத்திரிகையாளரையும் கொலை செய்தது.


தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போரால் எண்ணெய்க் குழாய் கனவு தள்ளிப் போனாலும், தாலிபானின் ஈரான் எதிர்ப்பு வெறியை அமெரிக்கா புன்னகையுடன் ஆமோதித்தது.


1997 நவம்பரில் தாலிபானின் முல்லாக்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற யூனோகால், தாலிபான் அரசுக்கு அமெரிக்க அரசின் அங்கீகாரத்தை பெற்றுத் தர முயன்றது.


1998 – இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னர் ஜாகிர் ஷாவின் ஆதரவாளருமான ரோரா பேச்சர் ” தாலிபான் உருவாக்கத்தில் அமெரிக்க அரசின் பங்கு” பற்றிய ஆவணங்களைத் தகவல் பெறும் உரிமையின் கீழ் (Right to information) சட்டப்படி தனக்கு காட்ட வேண்டும் என்று கடுமையாகப் போராடினார். 1996 – க்கு முந்தைய ஆவணங்களை (அதாவது தாலிபானை சி.ஐ.ஏ. உருவாக்கிய இரகசியத்தைத்) தர மறுத்தது கிளிண்டன் அரசு.


1998 ஆகஸ்டில் கென்யாவிலும் டான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்படன. “இது பின்லாடனின் சதி” என கூறி ஆப்கானிலுள்ள பயிற்சி முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தது கிளிண்டன் அரசு.


பின்லாடனுக்கு தஞ்சமளிப்பது, மனித உரிமை மீறல், கஞ்சா பயிரிடுதல் போன்ற குற்றங்களுக்காக அக்டோபர் 99 முதல் பொருளாதாரத் தடை விதித்தது ஐ.நா.


இருந்த போதும் தனது கையாட்களான பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய எமிரேட்டுகள் ஆகிய நாடுகள் தாலிபான் அரசுடன் தூதரக உறவு வைத்திருப்பதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தாலிபானுக்கு கதவை மூடினாலும் சமரசத்திற்கு சன்னலைத் திறந்து வைத்திருந்தது.


மே, 2001 இல் 34 மில்லியன் டாலர் நிதியைக் கொடுத்து கஞ்சா பயிரிடுவதைக் கட்டுப்படுத்தியதற்காக தாலிபானைப் பாராட்டி, மேலும் உதவி தருவதாக ஆசையும் காட்டியது அமெரிக்க அரசு.


ஆனால் அடுத்த உதவியைத் தருவதற்குள் செப்டம்பர் 11 முந்திக்கொண்டு விட்டது. தான் பெற்றெடுத்த கம்யூனிசத்திற்கெதிரான “இஸ்லாமிய சர்வதேசியம்” என்ற பேய்க்கு ஞானஸ்நானம் செய்வித்து “பயங்கரவாதத்திற்கெதிரான உலகப் போர்” என்று புதுப் பெயர் சூட்டியிருக்கிறது அமெரிக்கா. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவு இத்துடன் முடிந்தது என்று நம்பலாமா ?


“என்னை நம்புங்கள். எங்கள் கொள்கை ரசியாவின் நலன்களுக்கு எதிரானதல்ல, மத்திய ஆசியாவிலிருந்து ரசியாவை வெளியேற்றும் திட்டம் எதுவும் எங்களுக்குக் கிடையாது” என்று பொய்ச் சத்தியம் செய்து ரசியாவின் ஆதரவைக் கோருகிறார் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கண்டலீஸா ரைஸ்.


சீனா, ஈரான் எல்லா அரசுகளிடமும் துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் டோனி பிளேயர். உண்மைகளோ வேறு விதமாக இருக்கின்றன.

அமெரிக்காவின் இரட்டை வேடம் அமெரிக்காவின் இரட்டை வேடம் Reviewed by Madawala News on 7/22/2017 01:33:00 PM Rating: 5