tg travels

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அவலம் என வெளியான செய்திக்கு பலன்..


பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அவலம் என்ற தலைப்பில் பாடசாலைக்கு வினாத்தாள் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட கவனையீனத்தையும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஒரு பெற்றோரின் உதவியுடன் அண்மையில் எமது செய்தி தளத்தினால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

இச்செய்தியின் பயனாக பாடசாலை நிர்வாகம் வெளிப்பாடசாலைகளில் இருந்து வினாத்தாள்கள் பெற்றுக்கொள்வதை நிறுத்தி, சுயமாக வினாத்தாள்களை தயாரித்து மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

காலம் கடந்தாவது இவர்கள் செய்த இந்த நடிக்கையானது பாடசாலையின் தன்மானத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்க உதவியது .

இது குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண கல்வி அதிகாரி, சில்வா அவர்கள் குறிப்பிடுகையில் மாகாண கல்வி காரியாலயத்திற்கு அறிவித்திருந்தால் இதுபற்றி மாற்று நடவடிக்கை சம்பந்தமான அறிவுறுத்தல் நாம் அவர்களுக்கு வழங்கி இருப்போம் கல்விக்காரியாலயம் 

அறியாத வகையில் இவர்கள் இவ்வாறு செய்வது சட்ட விரோத செயலாகும்.இது குறித்து பெற்றோர்கள் முன்வந்து எமக்கு எழுத்துமூலம் புகார் ஒன்றை செய்யுமிடத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.மேலும் எமது செய்தி தளத்தில் வெளியான செய்தி சம்பந்தமாக கல்வி அமைச்சின் கவணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் பயனாக இப்பாடசாலைக்கு கூடிய சீக்கிரத்தில் அதிபர் ஒருவரை நியமிக்க எதிர்வரும் வாரங்களில் வர்த்தமானி அறிவித்தலை விடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் இப்பாடசாலையின் அவலம் குறித்து குறித்து முக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் வினவியபோது "இப்பாடசாலையில் குறைகளை சுட்டிக் காட்ட யாரும் எம்மிடம் வருவதில்லை பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் இயங்குவதில்லை தாமாவது அவர்களை அழைத்து கதைப்பதாக கூறினார் "

ஆனால் கடந்த காலங்களில் பாடசாலைக்கு அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நியமிக்கும் போது நான் நீ என முன்டி அடித்துக் கொண்டு இறுதியில் பொலிஸ் பாதுகாப்புடன் அங்கத்தவர் நியமனம் நடந்ததை யாரும் அறிவர்.இவ்வாறு பாடசாலை பெற்றோறின் தெரிவு செய்யும் உரிமையையும் மரித்து பதவிக்கு வந்த இந்த உறுப்பினர்கள் தாங்கள் பொறுப்புக்கள் பற்றி நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் செல்லித்தான் ஆக வேண்டும் என்பதையும் மனதில் வைத்து கொள்ளவேண்டும் .

மேலும் இது போன்ற சமுதாய சீர்கேடுகளை அவ்வப்போது வெளிக்கொண்டு வந்தது சீர் செய்ய சமுகவலைத்தலங்கலும் சமுதாயதிற்கு துணை புரிய வேண்டும் 

-அபூ ஹிஸ்மத்-

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அவலம் என வெளியான செய்திக்கு பலன்.. பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அவலம் என வெளியான செய்திக்கு பலன்.. Reviewed by Madawala News on 7/26/2017 01:24:00 PM Rating: 5