Kidny

Kidny

வருகிறது கிழக்கு தேர்தல் : சமூகத்திற்காக ஒற்றுமைப்படுவோம்


எஸ்.றிபான் -


கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் இவ்­வ­ருட இறு­தியில் நடை­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன. இதனால், அர­சியல் கட்­சிகள் யாவும் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்ற திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

கிழக்கு மாகா­ணத்­தில்தான் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றார்கள். 

இதனால், கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் நிரூ­பிக்­கப்­பட வேண்­டி­ய­தொரு கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாத அமைப்­புக்­களும், அதற்குத் துணை­யாக ஒரு சில அமைச்­சர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தற்கு முஸ்­லிம்­களின் அர­சியல் பல­வீனம் அடைந்­துள்­ள­மையே கார­ண­மாகும்.

முஸ்லிம் கட்­சி­களும், அர­சியல் தலை­மை­களும்   முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை சுய­ந­லன்­க­ளுக்கு ஏலம் போட்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன. இதனால், முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது. இதனை பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் உணர்ந்­துள்­ளார்கள். குறிப்­பாக முஸ்லிம் கட்­சி­களும், அர­சியல் தலை­வர்­களும் ஒரு குடையின் கீழ் ஒற்­று­மைப்­ப­டுதல் வேண்­டு­மென்று கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 



திட்­ட­மில்­லாத முஸ்லிம் கட்­சிகள்


இதே­வேளை, அர­சியல் கட்­சிகள் மேற்­கொண்­டி­ருக்கும் அர­சியல் நகர்­வுகள் முஸ்­லிம்கள் அர­சியல் ரீதி­யாக ஒற்­று­மைப்­ப­டுதல் வேண்­டு­மென்­ப­தனை கட்­டா­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தை கைப்­பற்றிக் கொள்­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன வகுத்­துள்­ளன.



ஆனால், எந்­த­வொரு முஸ்லிம் கட்­சியும் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தை கைப்­பற்றிக் கொள்­வ­தற்­கு­ரிய திட்­டத்தை வகுத்துக் கொள்­ள­வில்லை. முஸ்லிம் கட்­சி­களை அர­வ­ணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்கு இரண்டு தேசிய கட்­சி­களும்  முஸ்லிம் கட்­சி­க­ளுடன் பேசி­யுள்­ளன. 

முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலை ஐ.தே.கவுடன் இணைந்து யானைச் சின்­னத்தில் போட்­டி­யிட உள்­ள­தாக அக்­கட்­சியின் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

பெரும்­பாலும் அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்­டி­யி­டவும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யி­டவும் முஸ்லிம் காங்­கிரஸ் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அம்­பாறை மாவட்­டத்தில் 06 பேரும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 03 பேரும் முஸ்லிம் காங்­கி­ரஸின் சார்பில் யானைச் சின்­னத்தில் போட்­டி­யிட உள்­ளனர்.

இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யி­டவும், ஏனைய மாவட்­டங்­களில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்­டி­யி­டவும் எண்­ணி­யுள்­ளது. 

மேலும், தேசிய காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட நினைத்­துள்­ளது.

இவ்­வாறு முஸ்லிம் கட்­சிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு எண்ணிக் கொண்­டாலும் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் கூட்­ட­மைப்பு என்ற பேச்­சுக்கள் அதிகம் பேசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்­புக்கு கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளி­டையே அதிக வர­வேற்­புள்­ளது. 


தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு


இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்­கி­ர­சிங்­க­வோடு இர­க­சிய ஒப்­பந்­த­மொன்­றினைச் செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.அதா­வது, கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் ஐ.தே.கவின் பட்­டி­யலில் தமிழ் வேட்­பா­ளர்கள் யாரையும் நிறுத்தக் கூடா­தென்றும், அவ்­வாறு செய்தால் கிழக்கு மாகாண சபையின் ஆட்­சியை ஐ.தே.கவுடன் பகிர்ந்து கொள்­வ­தற்கு தயார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க உடன்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆகவே, கிழக்கு மாகா­ணத்தில் உள்ள 03 மாவட்­டங்­க­ளிலும் தமி­ழர்­களின் வாக்­குகள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு அளிக்­கப்­படும் வேளையில், முஸ்­லிம்­களின் வாக்­குகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸிற்கும், ஐ.தே.க.விற்கும், ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சிக்கும் அளிக்­கப்­படும் போது முஸ்­லிம்­களின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­படும். இதனால், முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­துவம் இன்­றுள்­ள­தனை விடவும் குறை­வ­தற்கே வழி ஏற்­படும். 

இந்த ஆபத்­தி­லி­ருந்து முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மாயின் முஸ்லிம் கட்­சிகள் யாவும் ஓர் அணி­யாக தனித்துப் போட்­டி­யிட வேண்டும். இதனைச் விடச் சிறந்த வழி இருக்­காது. 

முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு மூலம்தான் முஸ்­லிம்­களின் அர­சியல் பலத்தை மீண்டும் உறுதி செய்து கொள்­ளலாம் என்ற உண்மை இருக்­கின்­றது. இதே­வேளை, முஸ்­லிம்­க­ளி­டையே முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்கு அதிக வர­வேற்­புள்­ளதால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் பெரும்­பான்­மை­யாக முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்கு கிடைக்­கவும் சாத­கங்கள் உள்­ளன. ஆகவே, முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு என்­பது காலத்தின் தேவை­யாகும்.

முஸ்­லிம்கள் எதிர்ப்பு


முஸ்­லிம்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வாக்­க­ளித்­த­மையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ மறுக்க முடி­யாது. ஆயினும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் எத­னையும் இன்­றைய அர­சாங்கம் தீர்த்து வைக்­க­வில்லை. மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் நடந்­த­தனை விடவும் மோச­மான வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­கு­ரிய இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்­கா­துள்­ளது. 

பொதுபலசேனா போன்ற பௌத்த இன­வாத அமைப்­புக்­க­ளுடன் அர­சாங்கம் நெருக்­கத்தைப் பேணிக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அமைப்­புக்­க­ளுக்கு அமைச்­சர்­களே ஆத­ரவு அளித்துக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேசு­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திப்­ப­தற்கு எழுத்து மூலம் கேட்டுக் கொண்ட போதிலும் பலநாள் இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்­டது. 

அவர் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பேசினால் தமக்கு பௌத்த இன­வா­தி­களின் எதிர்ப்­புக்கள் அதி­க­ரிக்கும் என்று எண்­ணு­வ­தா­லேயே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திப்­பதை தள்­ளிப்­போட்டார். 



இன்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் உறுப்­பி­னர்­களுள் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் ஏ.எச்.எம். பெளஸி ஆகி­யோரைத் தவிர ஏனை­ய­வர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்கு பாடு­பட்­ட­வர்கள்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திப்­ப­தனை தவிர்த்துக் கொண்டு வரு­வது முஸ்­லிம்­க­ளி­டையே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அர­சாங்­கத்தின் மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­களில் மேலும் கீறல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. 

இந்­நி­லையில் முஸ்லிம் கட்­சிகள் இன்­றைய அர­சாங்­கத்தில் தொடர்ந்தும் பங்­காளி என்­றி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்­திற்கு செய்யும் துரோ­க­மாகும் என்­பதே பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களின் கருத்­தா­க­வுள்­ளது.முஸ்­லிம்­களின் இக்­க­ருத்து மூல­மாக தேசிய கட்­சி­க­ளையும், அத­னோடு முஸ்லிம் கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வ­த­னையும் முஸ்­லிம்கள் விரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது.

பேச்­சு­வார்த்­தைகள்


இதே வேளை, முஸ்லிம் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய பேச்­சுக்­களும் இடம் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதற்­கான முழு முயற்­சி­களில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஹஸன்­அலி அணி­யினர் தீவி­ர­மாக ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வ­ணி­யினர் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும், நல்­லாட்­சிக்­கானமுன்­ன­ணியின் தலைவர் அப்­துர்­ரஹ்மான் ஆகி­யோர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.



அடுத்­த­வாரம் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய இரண்டாம் கட்டப் பேச்­சுக்­களில் ஈடு­பட உள்­ள­தா­கவும், அதன் பின்னர் இறுதி முடி­வு­களை எடுக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும், முஸ்லிம் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் பேச்­சுக்­களில் ஈடு­பட அழைப்பு விடுக்­க­வுள்­ள­தாக முஸ்லிம் காங்­கி­ரஸின் ஹஸன்­அலி அணி­யினர் தெரி­விக்­கின்­றார்கள். முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் பல­ரிடம் பேசி­யுள்­ள­தா­கவும், அவர்கள் இதனை வர­வேற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

விரைவில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை சந்­தித்து முஸ்லிம் கூட்­ட­மைப்பின் அவ­சியம் குறித்து பேச­வுள்­ள­தா­கவும் ஹஸன்­அலி அணி­யினர் தெரி­விக்­கின்­றார்கள்.



இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்­புக்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளார்கள். இதனால் முஸ்லிம் காங்­கிரஸ் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய சாத்­தி­யங்கள் குறை­வா­கவே இருக்கும் எனலாம். முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டதும் தலை­மைத்­துவ சபை ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென்றும், அச்­சபை எடுக்கும் தீர்­மா­னங்­க­ளையே அமுல்­ப­டுத்த வேண்­டு­மென்றும், செய­லா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­டு­பவர் இரண்டு வரு­டங்­களின் பின்னர் மாற்­றப்­ப­டுதல் வேண்­டு­மென்றும் ஆரம்ப கட்ட பேச்­சுக்­களின் போது உடன்­பாடு கண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. 

மீண்டும் இணைத்துக் கொள்ளல்


முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் அதில் முஸ்லிம் காங்­கிரஸ் இணைந்து கொண்­டாலும், இணை­யாது போனாலும் முஸ்லிம் காங்­கி­ரஸின் எதிர் காலத்­திற்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்று சுட்டிக் காட்­டப்­ப­டு­கின்­றன.

இதி­லி­ருந்து முஸ்லிம் காங்­கி­ரஸை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மாயின் கட்­சியின் தலை­வ­ரோடு முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள ஹஸன்­அலி அணி­யி­னரை மீண்டும் கட்­சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் வலுத்துக் கொண்டு வரு­கின்­றன. இக்­கோ­ரிக்­கையை ஒரு சிலர் மறு­த­லித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

என்ன நடந்­தாலும் ஹஸன்­அலி அணி­யி­னரை மீண்டும் இணைத்துக் கொள்ளக் கூடா­தென்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில் கட்­சியை மக்கள் காப்­பாற்­றி­ய­தனைப் போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லிலும் முஸ்­லிம்கள் கட்­சியை காப்­பாற்­று­வார்கள் என்று வேதாந்தம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்­களாம். 

தடுத்து நிறுத்­துதல்


முஸ்லிம் கூட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய முயற்­சிகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற வேளையில், அதனை தடுத்து நிறுத்தும் வேலை­களும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இதற்­காக ஒரு கட்­சியின் உறுப்­பி­னர்கள் தீவிர செயற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். இவர்கள் ஹஸன்­அலி அணி­யி­னரை தனித்­த­னியே சந்­தித்து பேச்­சுக்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வர்தான் அதி­தீ­வி­ரத்தை காட்டிக் கொண்­டி­ருக்­கின்றார். இவர் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் ஒரு­வரை மீண்டும் கட்­சியில் இணைந்து கொள்­ளு­மாறு தூது விடுத்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. 

அர­சியல் பலம் அவ­சியம்


முஸ்­லிம்­களைப் பொறுத்தவரை ஒற்­று­மைப்­பட்ட அர­சியல் பலத்­தி­னால்தான் சாதிக்க முடியும். இன்று இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே அர­சியல், மத ரீதி­யான கொள்கை, அமைப்­புக்கள் என பல பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களின் அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்திக் கொண்டு செயற்­பட்ட முஸ்லிம் கட்­சிகள் தமது கட­மையை சரி­யாக செய்­ய­வில்லை.  முஸ்­லிம்­களின் வாக்­குகள் தனி நபர்­களின் இலா­பங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தொடர்ந்தும் இதே நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளார்கள். முஸ்லிம் கட்­சி­களின் ஏமாற்று நட­வ­டிக்­கைகள் பற்றி முஸ்­லிம்கள் மிகுந்த கவ­லையில் உள்­ளார்கள்.

இன்று அர­சியல் அதி­கா­ரத்­திற்­காக ஐ.தே.கவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்­துள்­ளன. அர­சியல் தீர்­வினை முன்வைத்து சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அர­சியல் அதிகாரங்கள் வழங்கக் கூடாது.

புதிய அரசியல் யாப்பு அவசியமில்லை என்றெல்லாம் பௌத்த பீடங்கள் ஒற்றுமையாக பேசிக் கொண்டிருக்கின்றன. பௌத்த இனவாத அமைப்புக்கள் ஓர் அணியில் உள்ளன. தமிழர்களும் பெரும்பாலும் ஒற்றுமைப்பட்டுள்ளார்கள். ஒருசில அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையகக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.  அக்கூட்டுக்கட்சிகள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்று கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. 



ஆனால், முஸ்லிம் கட்சிகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒற்றுமைப்படுவதற்கு ஒத்துவராதுள்ளன. வேறுபட்ட கொள்கையைக் கொண்டுள்ளன.

இந்நிலை மாற வேண்டும். தனி நபர்களின் அரசியல் முக்கியமல்ல. ஒரு அரசியல் கட்சியின் எதிர்காலமும், அரசியலும் முக்கியமல்ல. முஸ்லிம்களின் எதிர்காலமும், அரசியல் பலமும் அவசியமாகும். 

இன்று ஏற்பட்டுள்ள நெருடிக்கடி நிலையில் முஸ்லிம் கட்சிகள் சமூகத்திற்காக ஒற்றுமைப்படாது போனால் முஸ்லிம்களின் எதிர்காலம் எவ்வாறு மோசமடையும் என்று சொல்ல முடியாது.

ஏனையவர்கள் ஒற்றுமைப்படும் போது முஸ்லிம்கள் மாத்திரம் தங்களிடையே பிளவுபட்டு ஆளுக்கொரு கட்சி என்று முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு துணையாக செயற்பட்டால் அத்தகையவர்கள் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் எட்டப்பர்கள் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்வதனை தவிர்க்க முடியாது. எனவே, முஸ்லிம் கட்சிகள் யாவும் சமூகத்தின் தேவைக்காக ஒற்றுமைப்படுதல் வேண்டும்.


வருகிறது கிழக்கு தேர்தல் : சமூகத்திற்காக ஒற்றுமைப்படுவோம் வருகிறது கிழக்கு தேர்தல் : சமூகத்திற்காக ஒற்றுமைப்படுவோம் Reviewed by Madawala News on 7/10/2017 11:26:00 AM Rating: 5