Ad Space avaiable

குப்பையிலிருந்து மின்சாரம் அடுத்த மாதம் ஆரம்பம் ..


கொட்டப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று உத்தேச செயற்திட்டங்கள் மேல் மாகாணத்தில்
அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுமென்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைக்குத் தீர்வாக, குப்பைகளை கொட்டும் நிலையம் புத்தளம் - அறுவாக்காடு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் 700 மெற்றிக் தொன் குப்பையில் 300 தொன் குப்பைகளைக் கொண்டு சேதனப் பசளை தயாரிக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 100 தொன் மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தொடர்ந்தும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர்; குறிப்பிட்டார்.
குப்பையிலிருந்து மின்சாரம் அடுத்த மாதம் ஆரம்பம் .. குப்பையிலிருந்து மின்சாரம் அடுத்த மாதம் ஆரம்பம் .. Reviewed by Madawala News on 7/31/2017 02:12:00 PM Rating: 5