tg travels

இலங்கை அர­சாங்­கமும் மஸ்­ஜிதுல் அக்­ஸா­வுக்­காக குரல் கொடுக்க வேண்டும் 


துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் உலக முஸ்­லிம்­க­ளுக்கு அல் அக்­ஸாவைக் காப்­பாற்­று­வ­தற்கு முன்­வ­ரு­மாறு அழைப்பு விடுத்­துள்ள நிலையில் இலங்கை அர­சாங்­கமும் மஸ்­ஜிதுல் அக்­ஸா­வுக்­காக குரல் கொடுக்க வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலா­சார அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம். அஸ்வர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.


அவர் அந்த வேண்­டு­கோளில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, துருக்­கிய ஜனா­தி­பதி செய்யித் அர்­துகான் உலக முஸ்­லிம்­க­ளுக்கு அல் - அக்­ஸாவைக் காப்­பாற்­று­வ­தற்கு முன்­வ­ரு­மாறு விடுத்­துள்ள வேண்­டு­கோளில் இலங்கை முஸ்­லிம்­களும் ஒன்று சேர வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அல்­லாஹ்­வி­ட­மி­ருந்து மனி­தர்கள் தொழ வேண்டும் என்ற பிர­க­ட­னத்தைச் செய்த புனித தலம் மஸ்­ஜிதுல் அக்ஸா. தொழு­கையின் கட்­டளை இறங்­கிய இடத்­தி­லேயே இன்று முஸ்­லிம்கள் தொழ முடி­யாத நிலைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ளனர்.


மஸ்­ஜிதுல் அக்ஸா பற்றி பனூ­இஸ்­ராயீல் சூராவில் “அதனைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் அபி­வி­ருத்­தி­யடைச் செய்­தி­ருக்­கிறோம். நம்­மு­டைய அத்­தாட்­சி­களை காண்­பிப்­ப­தற்­கா­கவே அழைத்துச் சென்றோம் நிச்­ச­ய­மாக! என்று அந்த சூறா குறிப்­பி­டு­கின்­றது. எனவே, தொழுகை இல்­லாமல் முஸ்­லிம்கள் இல்லை. இந்த மண்ணில் ஏற்­பட்ட இவ்­வ­ளவு பெரிய விப­ரீ­தத்தைப் பார்த்துக் கொண்டு முஸ்லிம் உலகம் கைகட்டி வாளா­வி­ருப்­பது என்­பது பெரும் மர்­மத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். அது மட்­டு­மல்ல, எமது நாட்­டி­லுள்ள முஸ்­லிம்­களும் கிப்­லதுல் ஊலா என்­ற­ழைக்­கப்­படும் மஸ்­ஜிதுல் அக்­ஸாவின் இந்த விப­ரீ­தத்தைக் குறித்து ஏன் வாளா­வி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்­வியும் எழுப்­பப்­ப­டு­கின்­றது.


இவ்­வே­ளை­யில்தான் துருக்­கியின் ஜனா­தி­பதி ரஜப் தையிப் அர்­துகான் உலக முஸ்­லிம்­க­ளுக்கு அல் - அக்­ஸாவைக் காப்­பாற்­று­வ­தற்கு முன்­வ­ரு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

 

இதில் எமது நாட்டு முஸ்­லிம்­களும் கட்­டாயம் ஒன்று சேர­வேண்டும். பற்­பல விட­யங்­க­ளுக்­காக வேண்டி இலங்­கையில் பள்­ளி­வா­சல்­களில் பற்­பல விப­ரீ­தங்கள் ஏற்­பட்ட போதும் அபா­ய­க­ர­மான வேளை­க­ளிலும் பள்­ளி­வா­சல்­களில் குனூத் ஓது­வ­தற்கு எமது முஸ்­லிம்கள் இப்­போது பழக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது முஸ்­லிம்கள் வச­முள்ள பெரும் ஆயு­த­மு­மாகும். இந்த ஆயு­தத்தை நாம் மீண்டும் கூர்­மை­யான முறையில் பாவிக்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்றோம். ஜம்­மி­யத்துல் உலமா போன்ற இயக்­கங்­களும் ஏனைய முஸ்லிம் இயக்­கங்­களும் இது குறித்து உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று பணி­வாக வேண்­டு­கோளை விடுக்க வேண்­டு­கிறேன்.


எனவே நாடு பூரா­க­வுள்ள பள்­ளி­வா­சல்கள் தோறும் நபி ஸல் அவர்கள் வாழ்வில் பின்­னிப்­பி­ணைந்­தி­ருக்­கின்ற மஸ்­ஜிதுல் அக்­ஸா­வைப்­பற்­றிய தெளிவை முஸ்­லிம்கள் பெற்றுக் கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். எனவே இது குறித்து பள்­ளி­வா­சல்கள் தோறும் குத்பாப் பிர­சங்­கங்­களில் மஸ்­ஜிதுல் அக்ஸா பற்­றிய விட­யங்­களை பிரஸ்­தா­பித்து எமது நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்கும் அல்­லாஹ்வின் பால் இரு கர­மேந்தி எமது இந்த புண்­ணிய தலத்தை மீட்­டுத்­த­ரு­மாறு துஆச் செய்­வ­தற்கும் இந்தப் பிர­சங்­க­கங்­களை நாங்கள் நல்ல முறையில் பயன்­ப­டுத்த வேண்டும்.


1968ஆம் ஆண்டில் மஸ்­ஜிதுல் அக்ஸா தீ வைக்­கப்­பட்ட போது கூட அந்த புனித பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் தொழு­வ­தற்கு கூட தடை செய்­ய­வில்லை. ஆனால் மிகவும் பயங்­க­ர­மான தடை இப்­போது விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை முஸ்­லிம்கள் கைகட்டி பார்த்துக் கொண்டு வாளா­வி­ருக்க முடி­யாது. எமது இஸ்­லா­மிய உணர்­வுகள் தட்டி எழுப்­பப்­பட வேண்டும். 


அடுத்­த­தாக ஐ.நா.விலுள்ள முஸ்லிம் நாடுகள் இது குறித்து அவ­சர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது மட்­டு­மல்ல, இலங்­கையும் ஐ.நா. சபையில் ஒரு முக்­கிய உறுப்­பினர். உல­கத்தின் பல முக்­கிய விட­யங்கள் பற்றி ஐ.நா. சபை­யிடம் பிரஸ்­தா­பிக்­கிறோம். எனவே எமது அர­சாங்­கமும் மஸ்­ஜிதுல் அக்ஸா சம்­பந்­த­மாக சிேயா­னிச இஸ்­ர­வே­லர்கள் மேற்கொண்டு வருகின்ற அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ. நா. சபையை உஷார்படுத்துவதற்கு பல யோசனைகளை முன்வைக்க வேண்டுமென எமது நாட்டு ஜனாதிபதியை நாம் வினயமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். இந்த நாட்டு முஸ்லிம் சமுதாயததிற்கு அவர் செய்யக் கூடிய ஒரு பெரும் பணி இது என்பதையும் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அர­சாங்­கமும் மஸ்­ஜிதுல் அக்­ஸா­வுக்­காக குரல் கொடுக்க வேண்டும்  இலங்கை அர­சாங்­கமும் மஸ்­ஜிதுல் அக்­ஸா­வுக்­காக குரல் கொடுக்க வேண்டும்  Reviewed by Madawala News on 7/28/2017 04:32:00 PM Rating: 5