Ad Space avaiable

அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகும் தீர்மானம் ..


உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்தாது போனால்,அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்புக்கு கூட்டு எதிர்க் கட்சியின் எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நாளை (03) கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், அரசியலமைப்புச் சபை உப குழுக்களிலிருந்து விலகுவதற்கும் தீர்மானம் எடுக்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க் கட்சி வெற்றிபெறும் என்பதையும், அரசாங்கம் தோல்வியடையும் என்பதையும் தெரிந்தே தேர்தலைப் பிற்போட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

பதுளை, மெதகமவில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகும் தீர்மானம் .. அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகும் தீர்மானம் .. Reviewed by Madawala News on 7/02/2017 10:17:00 PM Rating: 5