tg travels

மருத்துவர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு .. 


நான்கு முக்கிய நிபந்தனைகளுடன் மருத்துவர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளைய தினம் (05) நாடளாவிய ரீதியாக தொடர் பணி பகிஷ்கரிப்பபு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வைத்தியர்கள் நாளைய தினம் (05) முன்னெடுக்க திட்டமிட்டுள்ள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு பேராயர் அருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் கொழும்பில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கை முன்வைத்திருந்தார்.

டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் அவதியுறும் நிலையில் மக்களின் நிலை குறித்து கருத்திற்கொண்டு, குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஈடு செய்யும் பொருட்டு, இந்திய வைத்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆயினும் அதனை தாம் ஒருபோதும் எதிர்க்கமாட்டோம் என நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு ..  மருத்துவர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு ..  Reviewed by Madawala News on 7/04/2017 03:34:00 PM Rating: 5