Kidny

Kidny

ரணலின் கூட்டிலிருந்து முஸ்லீம் தலைவர்கள் வெளியேற வேண்டும்.


அஸ்மி ஏ கபூர் 

அதுவே முஸ்லீம் கூட்டமைப்புக்கு யோக்கியதையுடையதாக இருக்கும்.சம்மாந்துறையில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் முஸ்லீம் சமுகம் வெளிநாட்டு சக்திகளாலும்,உள்ளக சூழ்ச்சிகாரர்களாலும் இன்றைய தலைவர்களாலும் ஏமாற்றபட்டு நடு வீதிக்கு வந்து விட்டதாக உணர ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சமுகத்திற்காக குரல் கொடுத்து உண்மை உரைத்தது தேசிய காங்கிரஸ் என்பதும் அதன் தலைமை அதிகாரத்தை இழந்ததையும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உணர்ந்து விட்டார்கள்.


சர்வதேச சக்திகள் தமக்கு சாதகமான ஆட்சியாளரை நியமிக்க விரும்பியதன் விளைவுதான் இந்த ஆட்சி மாற்றம், அதன் பெருமானத்தை இன்று இறக்காமம் மாயக் கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலையில் நின்றும் அனுபவிக்கிறோம்.

ஞானசாரவை காட்டி தான் ஆட்சியமைக்க முஸ்லீம் விரோத செயற்பாடுகளை யார் திட்டமிட்டார்கள் என இப்போதுதான் எம்மவர்களுக்கு புரிகிறது ,

இவ்வறான சூழலில் முஸ்லீம் சமுகத்திற்கெனறு இன்று பேசுகின்ற முஸ்லீம் கூட்டமைப்பு நன்மை பயக்க வேண்டுமென்றால் இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளின் மறைகரம் ரணிலின் கூட்டிலிருந்து விடுபட வேண்டும் 

அதுவே கூட்டமைப்புக்கு யோக்கியதையுடையதாக இருக்கும்.இவ்வாறு தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம். அதாஉல்லாஹ் சம்மாந்துறை மத்திய குழு கூட்டத்தின் போது தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் எல்லோரும் தமது சுயநலத்திற்க்காக மக்களிடம் உண்மையை மறைத்த போதும் அதாஉல்லாஹ் என்பவன் சமுகத்திற்காக எழுந்து பேசினேன் ஆனால் எனக்கு காவி உடை அணிந்து பார்த்தனர் நான் ரசித்தேன் ஆனால் இன்று நிலை என்ன? நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக பேசுகின்ற திராணி எம்மிடமே இருக்கிறது.

தேசிய காங்கிரஸ் மக்களுக்காக எம்மவர்களின் நிம்மதிக்காக தன்னுடைய அதிகார வகையறைகளை தூக்கிஎறிந்தது,அந்த விடயம் சமுகத்திற்கானது,

அல் ஹம்துலில்லாஹ் எம் சமுகத்தின் நலனை கருத்திலெடுத்து எம்மோடு இணைந்து கொள்ளும் இளைஞர்களை பார்க்கும் போது உள்ளம் நிம்மதி அடைகிறது என்றார்.

ரணலின் கூட்டிலிருந்து முஸ்லீம் தலைவர்கள் வெளியேற வேண்டும். ரணலின் கூட்டிலிருந்து முஸ்லீம் தலைவர்கள் வெளியேற வேண்டும். Reviewed by Madawala News on 7/17/2017 10:25:00 PM Rating: 5