Kidny

Kidny

ரனில் பிரதமராக தொடர்ந்து நீடித்தால் நாம் அரசாங்கத்தில் இருக்க மாட்டோம் ; சு க உறுப்பினர்கள் திட்டவட்டம் ..


அரசாங்கத்திலிருந்து விலக நினைக்கும் உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள நிலையில் குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.


ரனில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் தாங்கள் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் இல்லையேல் தாங்கள் அனைவரும் செப்டம்பர் இறுதிக்குள் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடுவதாக தாங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருப்போர் அந்த முடிவை எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பதவிகளை விட்டு விலகி, தனியான அணியாகச் செயற்படுவது அல்லது எதிரணியுடன் இணைந்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர்.


இந்த நிலையில், பங்களாதேஷிற்கான விஜயத்திற்கு முன்னதாக, அவர்களைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடினார்.


இதன்போதே, அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை வரும் டிசெம்பர் 31ம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.இதன் போதே குறித்த உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு வரும் டிசெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரனில் பிரதமராக தொடர்ந்து நீடித்தால் நாம் அரசாங்கத்தில் இருக்க மாட்டோம் ; சு க உறுப்பினர்கள் திட்டவட்டம் .. ரனில் பிரதமராக தொடர்ந்து நீடித்தால் நாம் அரசாங்கத்தில் இருக்க மாட்டோம் ; சு க உறுப்பினர்கள் திட்டவட்டம் .. Reviewed by Madawala News on 7/15/2017 12:00:00 PM Rating: 5