Ad Space avaiable

மும்முனை துப்பாக்கி தாக்குதலில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லீம் பேருந்து ஓட்டுநர் ..



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியா அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சாமர்த்தியமாகவும் அதிவேகமாகவும் பேருந்தை ஓட்டியதால்.பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீர் அமர்நாத்திற்கு பேருந்தில் சுமார் 61 பேர் யாத்திரை மேற்கொண்டனர். அப்போது பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.


நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பேருந்தை ஓட்டியது சேக் சலீம் கஃபூர் என்ற முஸ்லிம் டிரைவர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேக் சலீம் கஃபூர், "நான் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது பேருந்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இறைவன் உதவியால் எனக்கு இருந்த சக்தியை கொண்டு பேருந்தை அதி வேகமாக ஓட்டினேன். எந்த சூழ்நிலையிலும் பேருந்தை நிறுத்த நினைக்கவில்லை. இதனால் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டனர் எனினும் ஏழுபேரை என்னால் காப்பாற்ற முடியவில்லை.


அதேவேளை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் யாத்ரீகர் கூறுகையில், "எங்கள் டிரைவர் மிகவும் தைரியசாலி, அவரால்தான் நான் உயிருடன் இருக்கிறேன்.' என்றார். இன்னொரு யாத்ரீகர் கூறுகையில், "மூன்று திசைகளிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும் டிரைவர் மிக தைரியமாக அதனை எதிர்கொண்டு பேருந்தை அதி வேகமாக ஓட்டி எங்களை காப்பாற்றினார்" என்றார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் தனது உறவினரை இழந்த பாக்ய மணி என்ற யாத்ரீகர் கூறுகையில், 'சம்பவம் நடந்த இடம் மிகவும் இருட்டான இடம். எங்களுக்கு எதுவுமோ தெரியவில்லை. ஆனால் டிரைவர் அந்த இருட்டிலும் அதி வேகமாக பேருந்தை ஓட்டி எங்களை காப்பாற்றினார்." என்று தெரிவித்தார்.


இதற்கிடையே குஜராத் முதல்வர் விஜய ரூபானி, சேக் சலீம் கஃபூரின் துணிச்சலான செயலை பாராட்டியுள்ளதோடு, விருது வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


சேக் சலீம் கஃபூரின் துணிச்சலான செயலுக்கு நாடெங்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

மும்முனை துப்பாக்கி தாக்குதலில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லீம் பேருந்து ஓட்டுநர் .. மும்முனை துப்பாக்கி தாக்குதலில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லீம் பேருந்து ஓட்டுநர் .. Reviewed by Madawala News on 7/11/2017 11:27:00 PM Rating: 5