Ad Space avaiable

மத்ஹப்கள் அடிப்படையிலான ஷரத்துகளை நீக்குக தனியார் சட்ட திருத்த சிபாரிசில் தெளஹீத் ஜமாஅத் கோரிக்கை ..


இலங்­கையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தின் சில ஷரத்­துகள் மத்­ஹ­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளன. இவை நீக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மத்­ஹ­பு­க­ளுக்கும், தரீக்­காக்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­காமல் புனித குர்ஆன் மற்றும் ஆதா­ர­பூர்­வ­மான நபி­மொ­ழி­களின் அடிப்­ப­டையில் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்டும் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள பரிந்­து­ரையில் தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் 13 பரிந்­து­ரைகள் அடங்­கிய 53 பக்­கங்­க­ளி­லான அறிக்­கையை தனியார் சட்டத் திருத்த சிபா­ரிசுக் குழு­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ளார். திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­கான குர்ஆன் மற்றும் நபி­மொ­ழி­களில் ஆதா­ரங்கள் குறிப்­பிட்ட அறிக்­கையில் விரி­வாக தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 


முஸ்லிம் தனியார் சட்டம் ஏன் புனித குர்ஆன் மற்றும் நபி­மொ­ழி­களின் அடிப்­ப­டையில் திருத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்கு உதா­ர­ணங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.


உதா­ர­ண­மாக தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திரு­மணம் (நிக்காஹ்) வின் போது 'வலி' பிர­சன்­னத்தில் வேறு­பாடு காணப்­ப­டு­கி­றது. ஷாபி மத்­ஹபைச் சேர்ந்த பெண்­ணாக இருந்தால் 'வலி' யின் அனு­மதி கட்­டாயம் என தனியார் சட்டம் தெரி­விக்கும் அதேவேளை ஹனபி மத்­ஹபைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 'வலி' யின் பிர­சன்னம் தேவை­யற்­றது என்­கி­றது. 'வலி'யின் பிர­சன்னம் இல்­லாத திரு­மணம் வலி­தற்­றது என்­பதே எமது நிலைப்­பா­டாகும். பெண்கள் எந்த மத்­ஹபைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் ‘வலி’ அவ­சியம் என சட்டம் திருத்­தப்­பட வேண்டும்.


ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் முன்­வைத்­துள்ள ஏனைய பரிந்­து­ரை­க­ளா­வன; 


* திரு­மணம் செய்து கொள்ளும் பெண்கள் அவர்கள் கன்­னி­யர்­க­ளாக இருந்­தாலும், வித­வை­க­ளாக இருந்­தாலும் திரு­ம­ணத்­துக்கு கட்­டா­ய­மாக அவர்­க­ளது சம்­மதம் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்­போ­தைய முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சம்­மதம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என்­பது உறு­தி­யாகக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. பெண்­களின் சம்­மதம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டாத ஒரு திரு­மணம் நடந்தால் அதனை செல்­லுப்­ப­டி­யற்­ற­தாக்கும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். 


* சில முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும் எனக் குரல் எழுப்பி வரு­கின்­றன. பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக கட­மை­யாற்­றலாம் என குர்­ஆனில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதனால் பெண் காதி நிய­மனம் என்ற பேச்­சு­வார்த்­தைக்கே இட­மில்லை. அதனால் காதி நீதி­பதி, விவாகப் பதி­வாளர், காதிகள் சபை அங்­கத்­த­வர்­க­ளாக பெண்கள் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டாது.


* முஸ்லிம் தனியார் சட்டம் ஒரு விவாகப் பதிவின்போது இருவர் சாட்­சி­க­ளாக கையொப்­ப­மிட வேண்டும் என்று தெரி­விக்­கி­றது. சாட்­சி­க­ளாக கையொப்­ப­மி­டு­ப­வர்கள் இரு­வரும், முஸ்­லிம்­க­ளாக திரு­மணம் பற்­றிய அறி­வு­டை­ய­வ­ராக, தக­வல்கள் அறிந்­த­வர்­க­ளாக தம்­ப­தி­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் தீர்த்து வைப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்ற வகையில் திருத்தம் அமைய வேண்டும். 


* முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை என்ன என்­பது விதிக்­கப்­ப­டா­தி­ருக்க வேண்டும். ஏனென்றால் வய­தெல்லை 16,18 என்று விதிக்­கப்­பட்­டாலும் பிரச்­சி­னைகள் ஏற்­படும். எனவே வய­தெல்லை இருக்கக் கூடாது என்ற நிலைப்­பாட்­டையே நாம் ஆத­ரிக்­கிறோம். இதே­வேளை பெண் பருவ வய­தை­ய­டைந்­தி­ருக்க வேண்டும். கண்­டிப்­பாக பெண்ணின் சம்­மதம் இருக்க வேண்டும். ‘வலி’ இருக்க வேண்டும். இரண்டு சாட்­சிகள் இருக்க வேண்டும். ‘வலி’ அனைத்­தையும் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்­டையே நாம் வலி­யு­றுத்­து­கிறோம். இதே­வேளை சிறுவர் திரு­ம­ணத்தை நாம் ஆத­ரிக்­க­வில்லை. 


* தற்­போது அமு­லி­லுள்ள சட்­டத்தில் 12 வய­துக்கு குறைந்த ஒரு பெண்ணின் திரு­ம­ணத்­துக்கு காதி நீதி­ப­தியின் அனு­மதி பெறப்­பட வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 12 வயது திரு­மணம் எமது நாட்டில் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் வரு­கி­றது. இது நாட்டின் குற்­ற­வியல் சட்­டத்­துக்கு முர­ணாக அமைந்­துள்­ளது. எனவே இது தொடர்­பாக கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்­றுக்கு வர­வேண்டும். இல்­லையேல் மாற்­றங்­களைச் செய்ய வேண்டும்.


* பல­தார மணத்தின் போது ஒருவர் இரண்­டா­வது, மூன்­றா­வது, நான்­கா­வது எனத் திரு­மணம் செய்து கொள்­ளும்­போது முன்­னைய மனை­வி­யர்­க­ளுக்கு அது அறி­விக்­கப்­பட வேண்டும்.


* மனை­வி­யர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம், சொத்­து­ரிமை, பாகப்­பி­ரி­வினை அனைத்தும் எழுத்து மூலம் வழங்­கப்­ப­ட­வேண்டும். பிள்­ளை­க­ளுக்­கான தாப­ரிப்பு முறை­யாக வழங்­கப்­ப­டு­வ­தற்கு சட்­டத்தில் நட­வ­டிக்கை இருக்க வேண்டும். 


* தற்­போது விவா­க­ரத்தில் பல முறைகள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. பஸகு, தலாக், குலா, முபாரத் என்று பல­வ­கைகள் இருக்­கின்­றன. இந்த முறைகள் பற்றி மக்கள் தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே விவா­க­ரத்து முறைகள் பற்றி தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 


* முத்தலாக் முறையில் மூன்று தலாக்­கையும் ஒரே முறையில் கூறு­வது தடுக்­கப்­பட்டு மூன்று சந்­தர்ப்­பங்கள் வழங்­கப்­பட வேண்டும்.


* 'கைக்­கூலி' என்­பது இஸ்­லாத்தில் சொல்­லப்­ப­ட­வில்லை. எனவே கைக்­கூலி என்­பது இல்­லாமற் செய்­யப்­ப­டு­வ­துடன் விவாகப் பதிவு புத்­த­கத்தில் 'கைக்­கூலி' என்ற வசனம் இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும். 


* காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவுடையவர்களாகவும் நாட்டின் பொதுச்சட்டம் தொடர்பான அறிவினைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இஸ்லாமிய சட்டம் பற்றி நன்கு கற்றவர்களாக இருக்க வேண்டும். காதி நீதிபதிகள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.


* விவாகரத்தின் போது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலைத் தீர்மானிக்கும் அதிகாரம் காதி நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும். 


* தலாக் கூறப்படும்போது பாதிக்கப்படும் பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பனவாகும்.

மத்ஹப்கள் அடிப்படையிலான ஷரத்துகளை நீக்குக தனியார் சட்ட திருத்த சிபாரிசில் தெளஹீத் ஜமாஅத் கோரிக்கை .. மத்ஹப்கள் அடிப்படையிலான ஷரத்துகளை நீக்குக தனியார் சட்ட திருத்த சிபாரிசில் தெளஹீத் ஜமாஅத் கோரிக்கை .. Reviewed by Madawala News on 7/26/2017 12:57:00 PM Rating: 5