tg travels

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பிரதமர் மறுப்பு ..


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை தனக்கு தந்துவிடுமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல ரதனாயக்க ஆகியோரை அழைத்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.


சுதந்திர கட்சி உறுப்பினர்களில் பலர் மஹிந்த பக்கம் தாவும் நிலை தோன்றியுள்ள நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை தனக்கு தந்துவிடுமாறு ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல ரதனாயக்க ஆகியோரை அழைத்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது.


எமக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி பிரதமர் தரப்பு இந்த கோரிக்கைக்கு மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த அமைச்சை பெற்றுக்கொண்டால் தாங்கள் தனியாக ஆட்சியமைப்போம் என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மூன்று மாதங்களுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு தந்தால் ஊழல் மோசடிளில் ஈடுபட்டவர்கள் அனைவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கூறியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பிரதமர் மறுப்பு .. ஜனாதிபதியின் கோரிக்கைக்கு பிரதமர் மறுப்பு .. Reviewed by Madawala News on 7/07/2017 08:46:00 PM Rating: 5