Ad Space avaiable

இனவாதம் பேசுவோரை நீதியின் முன் நிறுத்தவேண்டும்..


ஏ.எல்.எம். சத்தார்-

நாம் எமது சிறு பரா­யத்­திலே சிங்­கள முஸ்லிம் இரு சமூ­கங்கள் மத்­தி­யிலும் மிகவும் அன்­னி­யோன்­ய­மா­கவும் பரஸ்­பரம் சகோ­த­ரத்­துவ வாஞ்­சை­யு­டனும் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று ஒரு சிலர் மதங்­களை நிந்­தனை செய்து வரு­கின்­றார்கள். 

பௌத்­தர்கள், பௌத்த மதத்­திற்­கெ­தி­ரான வார்த்­தை­களைப் பிர­யோ­கித்து வரு­கின்­றார்கள். சிங்­க­ள­வர்கள் மேலான இனத்­த­வர்கள் என்று பெரு­மை­ய­டித்து வரு­கி­றார்கள். முஸ்­லிம்கள் இங்கு சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக வாழ்­கி­றார்கள்.

ஆனால் சகல இனத்­த­வர்­க­ளுக்கும் இங்கு வாழக்­கூ­டிய உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இங்­குள்ள சகல இனங்­களும் பாது­காக்­கப்­பட வேண்டும். ஓர் இனம் மற்றோர் இனத்தை தாங்­கு­வ­தாயின் அது வெட்­கக்­கே­டான செய­லாகும். யாருக்கும் அநீதி அட்­டூ­ழியம் இழைக்கக் கூடாது என்று சுகா­தாரம், போசனை மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன கூறினார். 

பேரு­வளை, சீனன்­கோட்டை இக்ராஃ தொழில் நுட்ப பயிற்சி நிறு­வ­னத்தின் வெள்ளி விழாவும் அதன் 24 ஆவது சான்­றிதழ் வழங்கும் வைப­வமும் ஜாமிஆ நளீ­மிய்யா கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே டாக்டர் ராஜித மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இக்ராஃ நிறு­வன முகா­மைத்­துவ நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் யாகூத் நளீம் தலை­மையில் இடம் பெற்ற மேற்­படி வைப­வத்தில் அமைச்சர் ராஜித மேலும் கூறி­ய­தா­வது,


முஸ்லிம் நாடு­களில் ஏனைய இனத்­த­வர்­களால் சுதந்­தி­ர­மாக வாழ முடி­யாது என்று ஒரு சிலர் கருத்து வெளி­யிட்டு வரு­கி­றார்கள். இணை­யத்­த­ளங்­க­ளிலும் பதி­வேற்றம் செய்­கி­றார்கள்.

உலகில் அப்­ப­டிப்­பட்ட நாடுகள் எங்கே இருக்­கின்­றன என்று நான் கேட்க விரும்­பு­கிறேன். நான் பல நாடு­க­ளுக்கும் பயணம் செய்­தி­ருக்­கிறேன். ஈராக், பலஸ்தீன் உட்­பட முஸ்லிம் நாடு­களில் கிறிஸ்­தவ மதத்­தினர் வாழ்­கி­றார்கள். பலஸ்தீன் அமைச்­ச­ர­வையில் கிறிஸ்­தவ அமைச்­சர்கள் அங்கம் வகிக்­கி­றார்கள். 

முஸ்லிம் நாடு­களில் வசித்து வரும் இதர சம­யத்­த­வர்­க­ளது விகி­தா­சார பட்­டியல் ஒன்றை எமது அமைச்சர் கபீர் ஹாஷிம் என்­னிடம் தரு­வ­தாக கூறி­யி­ருக்­கிறார்.

உண்மை இவ்­வா­றி­ருக்க, பொய் வதந்­தி­களைப் பரப்ப வேண்டாம் என்று சம்பந்­தப்­பட்­ட­வர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன். இலங்­கையை ஒரு பௌத்த நாடாக தவ­றாகக் காட்­டியும் இங்­குள்ள குடி­சன மதிப்­பீட்டில் தவ­றான கணக்­கினைக் காட்­டியும் கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் அடிப்­படை வாதிகள் இருக்­கின்­றனர். ஆனால் சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கத்தில் பெரும்­பா­லானோர் அப்­பாவி மக்­களே.

இந்­நாட்­டி­லுள்ள அர­சியல் வாதி­களும் ஒரு­சில ஊட­கங்­க­ளுமே நாட்டைக் குழப்ப தீ மூட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வரும் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். 

இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்­துள்ள நிலையில் சவூதி அரே­பியா எங்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்டிக் கொண்­டி­ருக்­கி­றது. இன­வாதம், மத­வாதம் துடைத்­தெ­றி­யப்­பட வேண்டும்.

அனை­வரும் சம­மாக கரு­தப்­பட வேண்டும். நாம் அனை­வரும் ஐக்­கி­யப்­பட்டு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முன்­வ­ர­வேண்டும். இன­வா­திகள் எதனைச் சொன்­னாலும் நாம் அதற்கு துணை போகக் கூடாது. முஸ்­லிம்கள் இன­வாதி, அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாறக்­கூ­டாது. நாம் அனை­வரும் சகோ­த­ரத்­து­வத்­துடன் கைகோர்ப்போம். பௌத்த தர்மம் மனி­தா­பி­மா­னத்­தையே போதிக்­கி­றது. ஏனைய சம­யங்­களும் அத­னையே போதிக்கின்றன என்றார்.

மாணவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன கையளித்தார். அரச தொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம், மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம்.அம்ஜாத் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இனவாதம் பேசுவோரை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.. இனவாதம் பேசுவோரை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.. Reviewed by Madawala News on 7/11/2017 12:02:00 PM Rating: 5