Ad Space avaiable

யாழ் துப்பாக்கி சூடு ; இருவர் கைது உயிழந்த மெய்பாதுகாவலருக்கு பதவி உயர்வு ..


பாறுக் ஷிஹான்-

நல்லூரில் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர வேட்டையின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நல்லூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து தேடல் வேட்டையிலும் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.


நேற்று(22) மாலை நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவருக்கு உயிரிழந்த நிலையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 


 நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.


அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர (வயது-58) சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி வந்துள்ளார்.


மேலும் இரு மெய்ப்பாதுகாவலர்களின் அர்ப்பணிப்பான கடமையினால் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


யாழ் துப்பாக்கி சூடு ; இருவர் கைது உயிழந்த மெய்பாதுகாவலருக்கு பதவி உயர்வு .. யாழ் துப்பாக்கி சூடு ; இருவர் கைது உயிழந்த மெய்பாதுகாவலருக்கு பதவி உயர்வு .. Reviewed by Madawala News on 7/23/2017 12:45:00 PM Rating: 5