Kidny

Kidny

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க முஸ்தீபு..


-ARA FAREEL-

வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை மைய­மாகக் கொண்டு அவற்­றுக்­கான தீர்­வு­களை வலி­யு­றுத்தும் ஓர் அர­சியல் கட்­ட­மைப்பு முஸ்லிம் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

இதற்­கென முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாவின் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் 

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ள­தா­கவும் கொள்­கை­ய­ளவில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் எம்.ரி. ஹசன் அலி தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்;

அர­சாங்கம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இனப்­பி­ரச்­சி­னை­யினை தீர்ப்­ப­தற்­கான தீர்வுத் திட்­ட­மொன்­றினை முன்­வைக்­க­வுள்ள நிலையில் முஸ்லிம் தரப்பு தமது அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்க வேண்­டி­யுள்­ளது. தமி­ழர்­களின் உரிமைப் போராட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வாறு தாக்கம் செலுத்­து­கின்­றதோ அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் தரப்பில் ஓர் அர­சியல் கட்­ட­மைப்பு தேவை. இதனை மைய­மாகக் கொண்டே முஸ்லிம் அர­சியல் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. 

உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சி, மாகாண சபை மற்றும் பொதுத் தேர்­தல்­களில் வட கிழக்கை மைய­மாகக் கொண்டு போட்­டி­யிடும்.

இக்­கூட்­ட­மைப்பை முஸ்­லிம்கள் பிர­தே­ச­வாத அர­சியல் அமைப்­பாக நோக்கக் கூடாது. வட கிழக்­கிலே முஸ்­லிம்கள் காணிப் பிரச்­சினை உட்­பட பல பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கி­றார்கள். கிழக்கில் மிகவும் செறி­வான சனத் தொகைப் பரம்­பலைக் கொண்­டுள்­ளார்கள்.

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை முன்­வைத்து தனி­யான ஓர் அர­சியல் அலகு தேவை என அப்­ப­குதி புத்­தி­ஜீ­விகள் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­ததன் கார­ண­மா­கவே இக்­கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

வட­கி­ழக்கு மாகாண முஸ்லிம் பிரச்­சி­னை­க­ளுக்­காக உரு­வாக்­கப்­படும் முஸ்லிம் கூட்­ட­மைப்பு எதிர்­கா­லத்தில் தேசிய ரீதியில் தம்மை விரிவுபடுத்தும் நிலையும் ஏற்படலாம். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தீர்வுகளை நோக்கியும் முஸ்லிம் கூட்டமைப்பு குரல் கொடுக்கும் என்றார்

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க முஸ்தீபு.. முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க முஸ்தீபு.. Reviewed by Madawala News on 7/04/2017 12:17:00 PM Rating: 5