Ad Space avaiable

கொழும்பு தவிர்ந்த பிற பகுதிகளுக்கு இன்று ஒரு மணி நேர மின்வெட்டு !


பெற்றோலிய கூட்டுத்தாபன பணி பகிஷ்கரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தவிர்ந்த நாட்டின் இதர பகுதிகளில் இன்று  ஒரு மணி நேர வெட்டு அமுல் படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விநியோக தடைப்பட்டமையினால் எம்பிலிபிடிய மற்றும் கெரவலபிட்டிய மின் நிலையங்களிம் செயற்பாடுகள் தற்போது முற்றுமுழுதாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அதன் காரணமாக இந்த ஒரு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தவிர்ந்த பிற பகுதிகளுக்கு இன்று ஒரு மணி நேர மின்வெட்டு ! கொழும்பு தவிர்ந்த பிற பகுதிகளுக்கு இன்று ஒரு மணி நேர மின்வெட்டு ! Reviewed by Madawala News on 7/26/2017 03:52:00 PM Rating: 5