tg travels

ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயத்திற்கு மூடுவிழா ! 


“ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்படுவது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுவது தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் தொடர்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் பேசினோம். இது தொடர்பில் அமைச்சரவை முடிவொன்றை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். 

“பில்லியன் ரூபாய் கணக்கில் மோசடி இடம்பெற்றிருக்கையில், ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் சில்லறை விடயங்களைப் பிடித்துக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

தற்போது இவர்கள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி வாகனங்களை கையாண்ட விதத்தையும் பிரியங்கர ஜயரத்ன, தனது மகளைப் பதவி ஒன்றில் அமர்த்தியுள்ளார் போன்ற சில்லறை விடங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இதுவா நாட்டில் உள்ள பிரச்சினை?. இதைக் கண்டறியுமாறு கொரியா நல்லாட்சி அரசாங்கம் இந்த காரியலாயத்தை அமைத்தது?. 

“பில்லியன் கணக்கில் கொள்ளையடித்தமை, பல மனித உயிர்களைப் பலியெடுத்தமை தொடர்பில் விசாரணை செய்யவே, இந்தக் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. 

“ஆனால், இது வரைக்கும் 76 குற்றங்கள் தொடர்பாகவே விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அதுவும் தற்போதைய அமைச்சர்கள் மேற்கொண்ட சில்லறை விடயங்களை முன்வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

“இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை. இதில் எவ்விதப் பிரயோசமும் இல்லை நினைத்து மூடிவிட்டால், நாளை, அரசாங்கத்துக்கு எதிராக விசாரணை மேற்கொண்டதன் காரணமாகவே இக்காரியலயம் பூட்டப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திவரும். 

அதனால், இது தொடர்பில் முமுமையாக ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மு டிவெடுக்கப்படும்” என்றார். 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தக் காரியாலயத்தை 3 மாதங்களுக்கு தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினாரா?” எனக் கேள்வி எழுப்பபட்டபோது, 

“‘பொலிஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அனைத்தையும் எனக்குத் தந்தால், 3 மாதங்களில், கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பிரதான பாரிய ஊழல் மோசடி, மனித படுகொலைச் சம்பவங்கள் தெடாடர்பில் வெளிப்படுத்துவேன்” என, ஜனாதிபதி கூறினார். 

“இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்புப் பேரணி அனைத்துக்கும் பின்னால், ஒரு இடத்தில் தான் நூல் இருக்கிறது. இந்த நூல் இழுப்பதற்கேற்பவே இவர்கள் ஆட்டம் காட்டுகின்றனர். 

“இந்த நாட்டை தின்று, மனித படுகொலை, ஊழல் மோசடிகளை நடத்தியவர்கள் யார் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ரகர் விளையாட்டு வீரர் தாஜுதீனைக் கொன்ற குடும்பம், எது, யார் கொன்றது, அவர் எவ்வாறு படு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அலைபேசி அழைப்புகள் எத்தனை, என்பது எல்லாருக்கும் தெரியும். 

இது தொடர்பான விவரங்கள் வௌவந்துகொண்டும் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டும் இருக்கின்றன. இது தொடர்பில், நீதிமன்ற திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிடம் 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.  

“இந்த காரியாலயம் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி, மனித படுகொலை சம்பவம் குறித்து எத்தனை விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பில் ஒரு பத்திரிக்கைகளிலும் வெளிவந்ததும் இல்லை. அதைப்பற்றி யாரும் எழுதியதும் இல்லை. ஆனால், மத்திய வங்கி விவகாரம் மாத்திரம் பூதாகரமாக்கி பக்கம் பக்கமாக செய்திகள் வெளிவருகின்றன. இது மாத்திரமே இந்நாட்டில் நடைபெற்ற ஊழல் மோசடி. 

இந்த அரசாங்கம் மோசடி செய்திருந்தால் அது குறித்து விசாரணை நடவடிக்கைகளை தாராளமாக முன்னெடுக்கலாம். விசாரணை என்று வந்துவிட்டால் கடந்த ஆட்சி காலத்தைப் போல் பொய்பித்தலாட்ட வேலைகளை செய்ய மாட்டோம்” எனவும் அவர் தெரிவித்தார். 

-TM -

ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயத்திற்கு மூடுவிழா !  ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயத்திற்கு மூடுவிழா !  Reviewed by Madawala News on 7/06/2017 07:57:00 AM Rating: 5