Kidny

Kidny

இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது..


ஜி.எஸ்.பி வரிச் சலுகையுடன் இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பாக கொழும்பு ஜயிக் ஹில்ட்டன் ஹொட்டலில் இடம்பெற்ற செயலமர்வில் அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஆடை உற்பத்தித்துறைக்கு கிடைத்துள்ள சலுகைகளை ஏனைய துறைகளுக்கும் அறிமுகம் செய்வதும் அவசியமாகும். இதன் மூலம் நாட்டின் கைத்தொழிலை விஷ்ரிக்க முடியும். கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை முதலாவது கைத்தொழில் வலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. கண்டி, குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  அங்கு மேலும் தெரிவித்தார்;. 


இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.. இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.. Reviewed by Madawala News on 7/21/2017 02:02:00 AM Rating: 5