Ad Space avaiable

வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டுகளை வைத்து மிரட்டல் விடுத்துவந்த இளைஞன் கைது.


ஹபராதுவ மிஹிரிபென்ன பிரதேசத்தில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுப காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சந்தேகநபரை சோதனையிட்டதில் அவரின் காற்சட்டை பையில் இருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய, தல்பே பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தனக்கு அச்சுறுத்தல் விடுத்தாலோ அல்லது இடையூறுகளை ஏற்படுத்தினாலோ தான் குண்டு தாக்குதல் மேற்கொள்வதாக குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் கூறி வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருபவர் என தெரியவந்துள்ளது.

இவருக்கு கைக்குண்டு எப்படி கிடைத்தது, இதனை ஏதாவது குற்றச்செயலுக்காக சந்தேகநபர் வைத்திருந்தாரா? என்பது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டுகளை வைத்து மிரட்டல் விடுத்துவந்த இளைஞன் கைது. வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டுகளை வைத்து மிரட்டல் விடுத்துவந்த இளைஞன் கைது. Reviewed by Madawala News on 7/14/2017 10:07:00 AM Rating: 5