tg travels

மாவனல்லை பிரதேச நபர் சடலமாக மீட்பு. ( Video)


மாவனல்லை கோன்கமுவ பிரதேசத்தில் பாதையொன்றின் மதகில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் குறித்த நபர் உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

50 வயதுடைய மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதவான் மற்றும் மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மாவனல்லை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பான    வீடியோ :

மாவனல்லை பிரதேச நபர் சடலமாக மீட்பு. ( Video) மாவனல்லை பிரதேச நபர் சடலமாக மீட்பு. ( Video) Reviewed by Madawala News on 7/04/2017 03:10:00 PM Rating: 5